பிரித்தானியாவில் உள்ள காரைநகர் நலன்புரிச்சங்கத்துக்கு நிதிசேர்க்கும் தொண்டு நடவடிக்கைக்காக ஈழத்தமிழ் பெண்ணான செல்வி வர்ஷினி தியாகலிங்கம் தேம்ஸ் நதியிலான ஒரு மைல் தூர தொண்டு நீச்சல் நிகழ்வில் பங்கேற்றுள்ளார்.இந்நிகழ்வு நேற்றுமுன்தினம் காலை 9 மணியளவில் Royal Victoria Dock எனும் இடத்தில் நடைபெற்றது. இத்தொண்டு நீச்சலில் சுமார் 5,000 பங்கேற்பாளர்கள் தத்தம் தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக நீச்சலில் ஈடுபட்டிருந்தனர்.
இதில் காரைநகர் மற்றும் அதன் மருத்துவ சேவை மேம்பாட்டிற்காக செல்வி வர்ஷினி தியாகலிங்கம் தானே முன் வந்து இத்தொண்டில் ஈடுபட்டுள்ளார். செல்வி வர்ஷினி தியாகலிங்கம் இத் தொண்டு நீச்சல் மூலம் இதுவரை 5647 பவுன்ஸ்களை நிதி நன்கொடையாக ஈட்டியுள்ளார்.
இதனை இவர் காரைநகர் நலன்புரிச் சங்கத்தினூடாக காரைக்கு அனுப்பிவைக்கவுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக