கனடாவிலுள்ள தமிழ் சமூகத்தினருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த பிரபல தமிழ் வர்த்தகர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
கனடாவின் மொன்ரியலில் வசித்துவந்த சுந்தரம் யோகராஜா (வயது 64) என்பவரே கடந்த புதன்கிழமை குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சுந்தரம் யோகராஜாவின் இறுதிச் சடங்கு நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றபோது பலநூற்றுக்கணக்கான தமிழர்கள் கலந்துகொண்டு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
பாரியளவிலான முதலீடுகளை மேற்கொண்டு கடின உழைப்பில் ஈடுபடுபவர்களுக்கு அவர் (சுதந்திரம் யோகராஜா) ஒரு முன் உதாரணமானவர். முதலில் கனடாவில் வர்த்தகத்தை ஆரம்பித்தவர் பின்னர் குடும்பத்தினருடன் இங்கு வாழ்ந்து வருகின்றாரென தெற்காசிய நாடுகளின் பெண்கள் சமூக நிலை உறுப்பினர் ரமணி பாலேந்திரா கூறியுள்ளார்.
சுந்தரம் யோகராஜன் வீட்டிற்கு அருகிலிருந்தே குப்பைகளை அகற்றுவது குறித்து அயலவரான மானுவல் மார்டினெஷ் (வயது 58) என்பவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்தே மானுவல் யோகராஜாவைக் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மானுவலைக் கைது செய்து விளக்கமறியலில் வைத்திருப்பதுடன் இச்சம்பவம் தொடர்பாக அவர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
நண்பர்கள், உறவினர்களால் யோகா என அழைக்கப்படும் யோகராஜா, 1980 ல் தமிழ் அகதியாக கனடாவுக்குள் தஞ்சம் புகுந்திருந்து ஒரு வன்முறைச் சம்பவத்தின் மூலம் மரணமடைந்துள்ளார்.
இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக இலங்கையிலிருந்து தமிழர்கள் வெளியேறுகின்றனர். ஆனால் யோகராஜா வன்முறை மூலம் மரணித்திருப்பது கவலையான விடயமென பாலேந்திரா கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக