ஞாயிறு, 31 ஜூலை, 2011

மட்டக்களப்பில் அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கு இராணுவ பாதுகாப்பு


மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் மற்றும் அரசாங்க வங்கிகளுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. புத்தூர் வங்கிக் கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் காணப்படும் அரசாங்க மற்றும் தனியார் துறைக்குச் சொந்தமான 54 வங்கிகளுக்கு இவ்வாறு விசேட இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
வங்கிகளின் பாதுகாப்பு தொடர்பில் வங்கி உயரதிகாரிகளுடன் இராணுவத்தினர் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இதேவேளை, சட்டவிரோத ஆயுதங்களைப் பயன்படுத்துவோருக்கு எதிராக வழக்குத் தொடரப்படவுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான காலக்கெடு இன்றைய தினத்துடன் முடிவடைகின்றது.
நாளை முதல் சட்டவிரோத ஆயுதங்களைப் பயன்படுத்தும் நபர்களை கைது செய்து அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய இராணுவத்தினரும் பொலிஸாரும் உத்தேசித்துள்ளனர்.
எதிர்வரும் காலங்களில் சட்டவிரோத ஆயுதங்களைப் பயன்படுத்துவோரை கண்டு பிடிக்கும் நோக்கில் கிழக்கு மாகாணம் முழுவதிலும் திடீர் சோதனைகள் நடத்தப்பட உள்ளது.
தேடுதல்களின் போது தேவை ஏற்பட்டால் குறைந்தளவான அதிகாரங்களை பயன்படுத்தலாம் என கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி பொனிபஸ் பெரேரா படையினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கருத்துகள் இல்லை: