| ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ஆசிரமம் அமைத்து ஆன்மீக பணியில் ஈடுபட்டவர் சாய்பாபா. |
| இவர் கடந்த மே மாதம் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது உடல் புட்டபர்த்தியில் உள்ள ஆசிரமத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் சமாதி கட்டப்பட்டது. அவரது முழு உருவ சிலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் குரு பவுர்ணமியையொட்டி சாய்பாபா சமாதி திறக்கப்பட்டது. சமாதியை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர் திரண்டு வந்தனர். இதனால் அங்கு கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாய்பாபா சமாதியை தரிசித்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அங்கு ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் ஆசிரமத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். |
வெள்ளி, 15 ஜூலை, 2011
புட்டபர்த்தியில் சாய்பாபா சமாதி இன்று திறப்பு: அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக