செவ்வாய், 26 ஜூலை, 2011

புதுப் பொலிவுடன் சங்கிலியன் சிலை 4 ஆம் திகதி திறப்பு

யாழ். முத்திரைச் சந்தியில் புதிதாக அமைக்கப்பட்ட சங்கிலிய மன்னனின் சிலை ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளதாக யாழ் மாநகரசபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார்.

மாநகரசபை மண்டபத்தில் இன்று செவ்வாய்கிழமை நண்பகல் நடைபெற்ற சங்கிலியன் சிலை திறப்புவிழா தொடர்பான கலந்துரையாடலின்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்தச் சிலையினை கைத்தொழில் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா திரைநீக்கம் செய்து வைப்பார் எனவும் நான்கு மதத் தலைவர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்,

தமிழ் அரசியல் பிரதிநிதிகள், அறிஞர்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் என பலருக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளதாகவும், யாழ்.நகர முதல்வர் தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை: