ஞாயிறு, 17 ஜூலை, 2011

மட்டக்களப்பில் முத்தமிழ் விழா

சுவாமி விபுலானந்த அடிகளாரின் 64ஆவது சிரார்த்த தினத்தையொட்டி மட்டக்களப்பு தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்த முத்தமிழ் விழா நேற்று  மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. 

மட்டக்களப்பு நீதிமன்றதிற்கு  முன்பாகவிருந்து விழா மண்டபம் வரை ஊர்வலம் சென்றதுடன்  நீதிமன்றத்திற்கு முன்பாக நிறுவப்பட்டுள்ள சுவாமி விபுலானந்தரின் உருவச்சிலைக்கு மட்டக்களப்பு தமிழ்ச்சங்க தலைவர் மலர்மாலை அணிவித்தார். 

முத்தமிழ் விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.  மாநாட்டையொட்டி விபுலானந்த இமயம் என்னும் சிறப்பு மலரும் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டது. 

கருத்துகள் இல்லை: