வடக்கில் 7 ஸ்ரீலங்கா பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.
இன்றும் நாளையும் இந்த நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.
வவுனியா, ஓமந்தை, முல்லைத்தீவு, விஸ்வமடு, அக்கரான்குளம், மல்லாவி மற்றும் உடுப்பிட்டி ஆகிய இடங்களில் இந்த நிலையங்கள் அமைகின்றன.
அமைச்சர் பசில் ராஜபக்ச இவற்றை திறந்து வைக்கிறார்.
இதேவேளை லங்கா இந்தியன் ஒயில் நிறுவனமும் வடக்கில் எரிபொருள் நிலையங்களை அமைக்கப் போவதாக அதன் முகாமை பணிப்பாளர் சுரேஸ்குமார் தெரிவி;த்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக