சனி, 16 ஜூலை, 2011

நடைப் பயணத்தில் மஹேல!

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன யாழ். போதனா வைத்தியசாலையில் புற்றுநோயாளர் பிரிவொன்றை ஆரம்பிக்கும் முகமாக நடைபயணத்தில் நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

அநுராதபுரம் தும்புட்டுகம என்ற நகரில் இருந்து நிதி சேகரிக்கும் நடைபயணத்தை இன்று ஆரம்பித்துள்ளார்.
இந்த நிதி சேகரிக்கும் நடை பயணம் 27 நாட்கள் கொண்டதாகும். யாழ். வைத்திசாலையில் புற்றுநோய் பிரிவொன்றை நிர்மாணிப்பதற்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி திரட்டும் நோக்கில் மஹேல ஜயவர்தன இந்த நடைபயணத்தை தொடங்கியுள்ளார்.
மஹேல ஜயவர்தன நிதி சேகரிக்கும் தொண்டு நிறுவனத்தின் ஒரு உறுப்பினராவார். அதேவேளை மஹேல புற்றுநோயினால் தனது இளைய சகோதரனை இழந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: