சனி, 23 ஜூலை, 2011

சாவகச்சேரி நகரசபை முழுமையாக இலங்கை தமிழரசு கட்சி வசம் - வலி. வடக்கு பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சி அமோக வெற்றி


யாழ்ப்பாண சாவகச்சேரி நகரசபையின் முழு ஆசனங்களையும் இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி 4307 வாக்குகளைப் பெற்று 9 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 1232 வாக்குகளைப் பெற்று 2ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 28 வாக்குகளையும் ஐக்கிய சோஷலிச கட்சி 38 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளன.

சாவகச்சேரி நகரசபை தொகுதியில் செல்லுபடியான வாக்குகள் 5605, நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 347 ஆகவும் பதிவாகியுள்ளன. மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 5952 ஆகும்
பருத்தித்துறை நகரசபையில் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி
 பருத்தித்துறை நகரசபையினையும் இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி 3263 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 1107 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 115 வாக்குகளையும் சுயேட்சைக்குழு 7 வாக்குகளையும் பெற்றுள்ளன.

 பருத்தித்துறை நகரசபை தொகுதியில் செல்லுபடியான வாக்குகள் 4493, நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 270 ஆகவும் பதிவாகியுள்ளன. மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 4763 ஆகும்.
நல்லூர் பிரதேச சபை தேர்தல் முடிவுகள்

யாழ்ப்பாண நல்லூர் பிரதேச சபையினையும் இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி 10107 வாக்குகளைப் பெற்று 10 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 2238 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 105 வாக்குகளை பெற்றுள்ளபோதிலும் ஆசனம் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை..

நல்லூர் பிரதேச சபை தொகுதியில் செல்லுபடியான வாக்குகள் 12505, நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 77 ஆகவும் பதிவாகியுள்ளன. மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 13257 ஆகும்.
வலி. வடக்கு பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சி அமோக வெற்றி

யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் வடக்கு பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசமாகியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி 12,065 வாக்குகளைப் பெற்று 15 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 4919 வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி 78 வாக்குகளை மாத்திரம் பெற்றுக்கொண்டுள்ளது.

வலிகாமம் வடக்கு பிரதேச தொகுதியில் செல்லுபடியான வாக்குகள் 17062, நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1643 ஆகவும் பதிவாகியுள்ளன. மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 18705 ஆகும்.
திருக்கோவில் பிரதேச சபையும் இலங்கை தமிழரசு கட்சி வசம்

 அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசமாகியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி 6865 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 1249 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் ஐக்கிய தேசியக் கட்சி 810 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தினையும் கைப்பற்றியுள்ளதன. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 497 வாக்குகளை மாத்திரம் பெற்றுக்கொண்டுள்ளது.

 திருக்கோவில் பிரதேச தொகுதியில் செல்லுபடியான வாக்குகள் 9421, நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 355 ஆகவும் பதிவாகியுள்ளன. மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 18,076 ஆகும்.
வலி. தென்மேற்கு பிரதேச சபையும் இலங்கை தமிழரசு கட்சி வசம்

 வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையையும் இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி 11,954 வாக்குகளைப் பெற்று 12 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 4,428 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 216 வாக்குகளை மாத்திரம் பெற்றுக்கொண்டுள்ளது.

 வலிகாமம் தென்மேற்கு பிரதேச தொகுதியில் செல்லுபடியான வாக்குகள் 16,598, நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1,771 ஆகவும் பதிவாகியுள்ளன. மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 18,369 ஆகும்.
வல்வெட்டித்துறையில் இலங்கை தமிழரசுக் கட்சி அமோக வெற்றி

 வல்வெட்டித்துறை நகரசபைக்கான தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி அமோக வெற்றியீட்டியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி 2416 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திக் கூட்டமைப்பு 653 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 93 வாக்குகளை மாத்திரம் பெற்றுக்கொண்டுள்ளது.

 வல்வெட்டித்துறை தொகுதியில் செல்லுபடியான வாக்குகள் 3106, நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 230 ஆகவும் பதிவாகியுள்ளன. மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 3394 ஆகும்.
நெடுந்தீவு பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அமோக வெற்றி

நெடுந்தீவு பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 1609 வாக்குகளைப் பெற்று 8 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சி 216 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 83 வாக்குகளை மாத்திரம் பெற்றுக்கொண்டுள்ளது.

நெடுந்தீவு தொகுதியில் செல்லுபடியான வாக்குகள் 1908, நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 102 ஆகவும் பதிவாகியுள்ளன. மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 2010 ஆகும்.
tamilmirror.lk

கருத்துகள் இல்லை: