திங்கள், 25 ஜூலை, 2011

யாழில் சிறுவர் புற்றுநோய் வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்காக நிதி சேகரிக்கும் நடவடிக்கை!



யாழ்ப்பாணத்தில் சிறுவர் புற்றுநோய் வைத்தியசாலையை நிர்மாணிக்கும் நடவடிக்கைக்காக நிதி சேகரிக்கும் பொருட்டு தென்னிலங்கை தேவேந்திரமுனையில் ஆரம்பமாகித் தொடர்ந்து கொண்டிருக்கும் நடை பயணம் இன்று யாழ்.நகரை வந்தடையவுள்ளது.
 
நேற்றையதினம் கொடிகாமத்தில் தங்கிநின்ற இந்த நடை பயணக் குழுவினர் இன்று காலை தமது நடைபயணத்தைத் தொடங்கி யாழ். நகரை சென்றடையும்போது யாழ். தாதியர் பயிற்சிக் கல்லூரியில் வைத்து அவர்கள் வரவேற்கப்பட உள்ளனர்.
 
யாழ்ப்பாணத்தில் நடைபயணம் தொடரும் வழியில் இந்தக் குழுவினரை பொதுமக்கள் வர்த்தகர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அனைவரும் உற்சாகத்தோடு வரவேற்றுத் தம்மாலான நிதி உதவிகளை வழங்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர். 


கருத்துகள் இல்லை: