செவ்வாய், 19 ஜூலை, 2011

அயர்லாந்து நாட்டில் அதிசய பிள்ளையார்! (பட இணைப்பு)

அயர்லாந்து நாட்டில் உள்ள மிகப் பெரிய சிற்பப் பூங்காதான் Victoria’s Way . இப்பூங்கா 22 ஏக்கர் வரை பரந்து விரிந்து காட்சி தருகின்றது. கறுப்புக் கிரானைட் கற்களால் கட்டப்பட்ட 14 சிற்பங்கள் இங்கு முக்கிய இடம் பிடித்து உள்ளன.

இங்கு செல்கின்ற சுற்றுலாப் பயணிகளுக்கு மன அமைதி, நிறைவு, ஆனந்தம் கிடைக்கப் பெறுகின்றது. அத்துடன் ஒரு ஆன்மீக பயணத்தை மேற்கொள்கின்ற அநுபவத்தையும் ஏற்படுத்துகின்றது. காலம் காலமாக நிலைத்து வந்த இருக்கின்ற அற்புதமான சிற்பக் கலையின் பரிணாமத்தை இங்கு காண முடிகின்றது.

இங்குள்ள சிற்பங்களில் மிகவும் தனித்துவமானவை விநாயகர் சிற்பங்கள். நடனம் ஆடுகின்ற - இசைக் கருவிகளை வாசிக்கின்ற - புத்தகம் படிக்கின்ற விநாயகப் பெருமானின் சிற்பங்கள் அற்புதம். உலகில் வேறு எங்கும் இத்தனை அற்புதமான சிற்பங்களை காணவே முடியாது.

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் மகாபலிபுரத்தைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் முருகன். இவர்தான் அற்புதமான இச்சிற்பங்களை செதுக்கிய அபரப்பிரமன்.







கருத்துகள் இல்லை: