வெள்ளி, 29 ஜூலை, 2011

ஓமந்தையில் ரயிலுடன் லொறி மோதியதில் விபத்து! - மூவர் பலி! ஒருவர் படுகாயம்


கொழும்பிலிருந்து ஓமந்தை நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று லொறியுடன் மோதியதில் ஸ்தலத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்த நிலையில் ஒமந்தைப் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து சம்பவமானது நேற்று வியாழக்கிழமை நண்பகல் 11.30 மணியளவில் நடைபெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
குறிப்பிட்ட புகையிரதம் ஓமந்தை புகையிரத நிலையத்தை அண்மித்தவேளை திடீரென லொறி ஒன்று புகையிரதக் கடவையைக் கடந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஒமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் மதவாச்சியைச் சேர்ந்த லொறியின் சாரதி உதயகுமார் (வயது21) மற்றும் அவருடன் பயணித்த தர்மசீலன் (வயது19) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
அதே லொறியில் பயணித்த மேலும் இருவர் (மஞ்சுதன் வயது 33, தாசன் வயது 48) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ஒமந்தை பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதேவேளை, விபத்தில் காயமடைந்த இருவரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் கிடைத்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கருத்துகள் இல்லை: