திங்கள், 25 ஜூலை, 2011

தெற்காசியாவைச் சேர்ந்த 4 ஆயிரம் பேருக்கு அவுஸ்திரேலியாவில் குடியுரிமை


புகலிடக் கோரிக்கை தொடர்பாக எதிர்வரும் வருடங்களில் அவுஸ்திரேலியாவில் உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்ட அகதிகள் 4 ஆயிரம் பேருக்கு குடியுரிமை வழங்குவதென அவுஸ்திரேலியா -  மலேசியா ஆகிய நாடுகளுக்கிடையில் இன்று திங்கட்கிழமை ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தாகியுள்ளது.
எதிர்வரும் வருடங்களில் அவுஸ்திரேலியாவில் உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்ட அகதிகள் 4 ஆயிரம் பேருக்கு ஒரு ஆண்டுக்கு 1000 போ் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு குடியுரிமை வழங்குவதெனவும் மேலதிகமாக தங்கியுள்ள 800 பேரை மலேசியாவுக்கு அனுப்புவதெனவும் ஒப்பந்தத்தினூடாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெறுவோர் அனைவரும் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தோர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலேசியாவின் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடீன் உசைன் மற்றும் அவுஸ்திரேலியாவின் குடிவரவு, குடியகல்வுத் துறை அமைச்சர் கிரிஸ் போவன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
மலேசியாவில் புகலிடக் கோரிக்கையை முன்வைத்து 93 அகதிகள் உள்ளதாகவும் இவர்களில் இலங்கையரும் உள்ளடங்கியுள்ளனர் எனவும் சர்வதேச அமைப்புகள் தெரிவிக்கின்றன.
இரண்டு நாடுகளுக்குமிடையிலான இந்த உடன்பாடு, எவரும் தஞ்சம்கோரி அவுஸ்திரேலியாவுக்குள் நுழையமுடியாத நிலையை ஏற்படுத்தும் என்பதால் ஆட்களை வெளிநாடுகளுக்கு கடத்தும் தொழிலில் ஈடுவோரின் வலையமைப்பையும் முறியடிக்க இது உதவும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.

கருத்துகள் இல்லை: