கடந்த வருடம் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்களில் ஒருவரான யாழ்ப்பாணத்துச் சிறுமி ஆசிய சிறுவர் இணைப்புத் திட்டத்தின் கீழ் கடந்த புதன்கிழமை யப்பான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளார். இவரின் பெயர் தாரணி இந்திரன்.
தரம் 05 வரை யாழ். உடுவில் மகளிர் கல்லூரியில் படித்தவர். தற்போது வேம்படி மகளிர் கல்லூரியில் படிப்பைத் தொடர்கின்றார். இவரைப் போலவே கடந்த புலமைப் பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற இன்னும் ஐந்து மாணவர்களும் யப்பானுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
அனைவருக்கும் கடந்த மூன்று மாத காலமாக கொழும்பில் யப்பானிய மொழி கற்பித்துக் கொடுக்கப்பட்டது. அத்துடன் யப்பானிய நாட்டு பழக்கவழக்கங்களும் படிப்பித்துக் கொடுக்கப்பட்டன. இவர்கள் ஒரு மாத காலம் யப்பானில் தங்கி இருப்பர். இந்நாட்களில் யப்பானில் இடம்பெறுகின்ற பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக