பலாலிக்கும் சென்னைக்கும் இடையேயான பயணிகள் விமான சேவையை விரைவில் ஆரம்பிக்க இரு நாட்டு அரசுகளும் கொள்கையளவில் இணக்கம் கண்டுள்ளன. இந்த புதிய விமான சேவையை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையைப் புனரமைத்து நீளமாக்கும் பணிகள் தற்போது முடிவடையும் நிலைக்கு வந்துவிட்டன.
இதனை அடுத்து சென்னைக்கும் பலாலிக்கும் இடையிலான விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு இரு நாட்டு அதிகாரிகள் மட்டத்திலும் தீவிரமான பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவித்து, சிவில் விமானப் போக்குவரத்துக்குரிய வசதிகளை இலங்கை அரசு ஏற்படுத்தியதும் சென்னைக்கான சேவை ஆரம்பிக்கப்படும் என்று கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய சேவையை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்க இந்திய அதிகாரிகள் எதிர்பார்ப்பதாகவும்.
அதேவேளை இலங்கை அதிகாரிகள் தமது பக்கத்துப் பணிகளைப் பூர்த்தி செய்தால் அது சாத்தியப்படும் என்று இந்திய தூதரக அதிகாரி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக