நியூசிலாந்துக்குள் கப்பல் மூலம் சட்டவிரோதமான முறையில் உட்பிரவேசிக்க முயன்ற இலங்கைத் தமிழர்கள் 87 பேர் கடலில் இன்று மதியம் இடைமறித்துப் பிடிக்கப்பட்டு உள்ளார்கள். இவர்கள் அலிசியா என்கிற கப்பலில் சில நாட்களுக்கு முன்னர் புறப்பட்டு இருந்தனர்.
நியூசிலாந்தை ஓரளவு நெருங்கி இருந்தனர். ஆனால் கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்த இந்தோனேசிய கடல் படையினர் இவர்களை மடக்கிப் பிடித்தார்கள். கப்பலை கைப்பற்றினார்கள். பற்றன் என்கிற இடத்துக்கு அருகில் வைத்து கைது இடம்பெற்றது.
கைது செய்யப்பட்டவர்களையும், கைப்பற்றப்பட்ட கப்பலையும் இந்தோனேசிய கடல் படையினர் இந்தோனேசியாவுக்கு கொண்டு செல்கின்றனர். இத்தமிழர்களில் சிறுவர்கள், பெண்கள் ஆகியோரும் அடங்குகின்றனர். நியூசிலாந்து அரசு பொறுப்பேற்று அரசியல் தஞ்சம் வழங்க வேண்டும் என்பது இத்தமிழர்களின் கோரிக்கையாக உள்ளது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக