ஞாயிறு, 24 ஜூலை, 2011

குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் கிளை அலுவலகம் வவுனியாவில்!

குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் கிளை அலுவலகமொன்றை வவுனியா மாவட்ட செயலகத்தில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பிரதேச மக்கள் கடவுச் சீட்டுக்காக கொழும்பிற்கு செல்லாது வவுனியாவிலேயே அதனைப் பெற்றுக்கொள்வதற்கு வழியேற்படும் என்று வவுனியா மாவட்ட அரச அதிபர் பீ.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.

உதவி ஆணையாளர் ஒருவரின் கீழ் இயங்கவுள்ள குடிவரவு - குடியகல்வு கிளை அலுவலகத்தின் ஊடாக வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த மக்கள் கடவுச் சீட்டுக்களை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை: