| உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரவிச்சந்திரன் இன்று காலமானார். |
| சென்னை மருத்துவமனையில் உயிர் பிரிந்தது. நடிகர் ரவிச்சந்திரனுக்கு மகன்கள் அம்சவர்த்தன் பாலாஜி, ஜார்ஜ் மற்றும் மகள் லாவண்யா உள்ளனர்.தமிழ் திரையுலகில் 1960 மற்றும் 70களில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் ரவிச்சந்திரன். திருச்சியில் புனித ஜோசப் கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற இவரை இயக்குனர் ஸ்ரீதர் 1964ல் காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். இவரது இறுதிச்சடங்குகள் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக