ஞாயிறு, 17 ஜூலை, 2011

இன்று 5-வது பிறந்தநாள்.

டுவிட்டரை மக்கள் பயன்படுத்தத் துவங்கி இன்றுடன் (16.07.2011) 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஆனால் டுவிட்டரின் உண்மையான பிறந்தநாள் என்று என்பது சரியாகத் தெரியவில்லை. 

டுவிட்டர் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டு இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் டுவிட்டர் தனது முதல் டூவீட் செய்யப்பட்ட 5-வது நிறைவு விழாவைக் கொண்டாடியது. 

டுவிட்டரின் உண்மையான பிறந்தநாள் தேதியை அது குறிப்பிடவில்லை. ஆனால் கடந்த மார்ச் மாதத்தில் 5-வது ஆண்டு விழாவைக் கொண்டாடுவதாக டுவிட்டர் அறிவித்தது. 

தற்போது நாள் ஒன்றுக்கு 140 மில்லியன் டுவீ்ட்கள் அனுப்பப்படுகின்றது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 100 மில்லியன் அதிகம். 

கடந்த மாதத்தில் இருந்து தினமும் 4 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தினும் புதிதாக டுவிட்டரில் சேருகின்றனர். மொபைல் டுவிட்டரைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 182 சதவீதம் அதிகரித்துள்ளது.

கருத்துகள் இல்லை: