தமது மகளை கொலை செய்த கொலையாளிக்கு மன்னிப்பு வழங்கியுள்ள இலங்கைத் தமிழ் குடும்பம் ஒன்று 50 ஆயிரம் சவூதி ரியால்களை பெற்றுக்கொள்ள இணங்கியுள்ளது
இந்த தகவலை அரப் நியூஸ் தெரிவித்துள்ளது.
ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
36 வயதான பவானிதேவி சின்னையா என்பவர் அவரின் சவூதி அனுசரணையாளரால் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி கொல்லப்பட்டார்.
மலையகத்தின் மஸ்கெலிய பிரதேசத்தை சேர்ந்த இவர், 2008 ஆண்டு முதல் சவூதியில் பணிப்பெண்ணாக கடமையாற்றி வந்தார்.
இந்தநிலையி;ல் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பவானியின் தந்தை, கொலையாளியை மன்னித்து விட்டதாக சவூதியில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து பவானியின் சம்பள நிலுவையான 16,245 சவூதி ரியால்களை பவானியின் தந்தைக்கு வழங்க சவூதி கொலையாளியின் தந்தை இணங்கியுள்ளார்.
அத்துடன் 50 ஆயிரம் ரியால்களும் நட்டஈடாக இன்று கொழும்பில் வைத்து வழங்கப்படும் என்று ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக