சனி, 23 ஜூலை, 2011

இன்று நடைபெறும் உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் முதலாவது தேர்தல் முடிவுகள் இன்று இரவு 10.00 மணிக்கு வெளியாகும்


தேர்தல் நடத்தப்படாது ஒத்தி வைக்கப்பட்டிருந்த 65 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப் பதிவுகள் ஆரம்பமாகி பிற்பகல் நான்கு மணி வரை இடம்பெறுகின்றன.
ஒரு மாநகர சபை, ஒன்பது நகர சபைகள், 55 பிரதேச சபைகளுக்கே இன்று தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.
தேர்தல்களுக்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள் ளப்பட்டுள்ளன. நேரகாலத் தோடு வாக்குச் சாவடி களுக்குச் சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணை யாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய வேண் டுகோள் விடுத்துள்ளார்.
65 உள்ளூராட்சி சபைகளிலும் நடைபெறும் தேர்தலில் 26 இலட்சத்து 30 ஆயிரத்து 985 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். இதன் மூலம் 875 உறுப்பினர்கள் தெரிவு செய் யப்படவுள்ளனர்.
5619 பேர் இந்த 65 சபைகளிலும் போட்டியிடுகின்றனர். 20 அரசியல் கட்சிகள், 72 சுயேச்சைக் குழுக்கள் சார்பில் இவர்கள் களத்தில் குதித்துள்ளனர்.
தேர்தல் நடைபெறும் பிரதேசங் களிலுள்ள சகல மக்களும் வாக்களிப்பதற்கு ஏதுவாக 2,226 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை 383 நிலையங்களில் வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் கூறினார்.
மொத்தமுள்ள 335 உள்ளூராட்சி சபைகளில் 234 சபைகளுக்கு கடந்த ஆண்டு (06.01.2010) தேர்தல்கள் நடத்தப்பட்டன. ஏனைய சபைகளுக்கான தேர்தல்கள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி மற்றும் நீதிமன்ற வழக்குகள், கண்ணிவெடி அகற்றப்படாமை ஆகியவற்றால் ஒத்திவைக்கப்பட்டன.
மேற்படி, ஒத்திவைக்கப்பட்ட சபைகளில் 65 உள்ளூராட்சி சபைகளுக்கே இன்று தேர்தல்கள் நடைபெறுகின்றன.
இந்தத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கள் கடந்த 12ம் திகதி நடந்தன. 60 ஆயிரத்து 443 பேர் தபால் மூலம் வாக்களித்துள்ளனர்.
இதேவேளை தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, நீதியும் நேர்மையுமான தேர்தலை நடத்துவதற்கான சகல நடவடிக் கைகளும் மேற்கொள்ளப்பட்டுள் ளதாகவும் மக்கள் காலந்தாழ்த்தாது காலையிலேயே வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தேர்தல் நடைபெறும் பிரதேசங்களின் பாதுகாப்பு, தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகள், வாக்களிப்பு நிலையங்கள் தொடர்பில் சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இன்று நடைபெறும் உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் முதலாவது தேர்தல் முடிவுகள் இன்று இரவு 10.00 மணிக்கு வெளியாகும் என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.
அதேவேளை, அனைத்து முடிவுகளும் 24ம் திகதி அதிகாலைக்கு முன்பாக வெளியிடப்படும் எனக் குறிப்பிட்ட அவர், தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் இம்முறை தனியாக வெளியிடப்படாது இறுதி முடிவுகளுடனேயே இணைந்து வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன், வாக்களிப்பு நிலையங்களுக்குள் புகைப்படம் எடுப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்ட அவர், அச்சு மற்றும் இலந்திரனியல் ஊடகங்களில் படங்களோ வீடியோ காட்சிகளோ வெளியாகினால் குறித்த வாக்களிப்பு நிலைய பொறுப்பதிகாரியே அதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் அவர் மீண்டும் தேர்தல் கடமைகளுக்கு அழைக்கப்படாததுடன் அவருக்கான கொடுப்பனவுகளும் ரத்துச் செய்யப்படுமெனவும் சுட்டிக் காட்டினார்.
தேர்தலில் வாக்களிப்போர் தமது தேசிய அடையாள அட்டை அல்லது தமது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணத்துடன் வாக்களிக்க வேண்டுமெனவும் அவர் மக்களைக் கேட்டுக் கொண்டார்.
கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் யாழ்ப்பாணத்தில் 201 உறுப்பினர்களும் கொழும்பில் 68 உறுப்பினர்களும் கம்பஹாவில் 34 உறுப்பினர்களும் களுத்துறையில் 11 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
கண்டியில் 55 உறுப்பினர்களும், மாத்தளையில் 23 உறுப்பினர்களும், காலியில் 46 உறுப்பினர்களும், மாத்தறையில் 12 உறுப்பினர்களும், கிளிநொச்சியில் 38 உறுப்பினர்களும், முல்லைத்தீவில் 9 உறுப்பினர்களும், அம்பாறையில் 14 உறுப்பினர்களும், திருகோணமலையில் 38 உறுப்பினர்களும், புத்தளத்தில் 59 உறுப்பினர்களும், அனுராதபுரத்தில் 32 உறுப்பினர்களும், பொலன்னறுவையில் 36 உறுப்பினர்களும், மொனராகலையில் 20 உறுப்பினர்களும், இரத்தினபுரியில் 57 உறுப்பினர்களும், கேகாலையில் 48 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
தேர்தல் கண்காணிப்பு நடவடிக் கைகளில் சர்வதேச கண்காணிப்பு அமைப்புக்கள், பெப்ரல், சி.எம்.சி.வி. போன்ற அமைப்புகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன

-நன்றி தமிழ்வின்-

கருத்துகள் இல்லை: