சனி, 30 ஜூலை, 2011

இன்று ஆடி அமாவாசை நாடு முழுவதிலும் பக்திபூர்வமாக அனுஷ்டிப்பு

இந்துக்கள் அனைவரும் புனிதமாக கருதும் ஆடி அமாவாசை தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

எள்ளு துளசி கொண்டு தர்ப்பணம் செய்து பிதிர் கடன்களைத் தீர்க்கும் புனித தினமாக இன்று கருதப்படுகிறது. மறைந்த தன் உறவுகளை நினைவு கூர்ந்து அவர்களது ஆத்மா சாந்தியடைய வேண்டி இன்றையநாளில் பிதிர் கடன் தீர்த்தல் நடைமுறையாகும்.

பஞ்ச ஈஸ்வரங்கள் என்று கூறப்படும் முன்னேஸ்வரம் திருக்கேதீஸ்வரம் நகுலேஸ்வரம் கோணேஸ்வரம் உட்பட சகல இந்து ஆலயங்களிலுமுள்ள தீர்த்தங்களில் பிதிர் கடன் தீர்க்கும் நிகழ்வுகள் இன்று நடைபெறுகின்றன.

நகுலேஸ்வரம் கீரிமலை தீர்த்தத்திலும் முன்னேஸ்வரம் மாயவனாற்றிலும் திருக்கேதீஸ்வரம் பாலாவி தீர்த்தத்திலும் கொழும்பு முகத்துவாரத்திலும் விசேடமாக பிதிர் கடன் தீர்க்கும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

வடமாகாணத்தில் உள்ள சிவாலயங்களில் ஆடி அமாவாசை விசேட பூஜைகள் நடாத்துவதற்கான ஆலோசனைகளை மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு வழங்கியுள்ளது.

ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் வடமாகாண ஆளுநர் இதற்கான பணிப்புரையினை பிரதேச செயலாளர்களுக்கு வழங்கியுள்ளார். 

கருத்துகள் இல்லை: