செவ்வாய், 26 ஜூலை, 2011

இலங்கை 10 ரூபா தாள்களுக்கு விடுதலை நாணயக் குற்றிகள் வருகின்றன


பத்து ரூபா நாணயத்தாள்கள் இனிவரும் காலங்களில் அச்சிடப்படமாட்டாது. இதற்குப் பதிலாக நாணயக் குற்றிகளே புழக்கத்துக்கு வரும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இது சம்பந்தமான இலங்கை மத்திய வங்கியின் மேலதிக நிதியாள்கை அதிகாரி திருமதி எச்.பீ.ரீ.விஜேயசூரிய கூறுகையில்:
இனிமேல் பத்துரூபா நாணயத்தாளுக்கு பதிலாக பத்துரூபா நாணயக்குற்றி மட்டுமே நிதிச்சந்தையில் புழக்கத்துக்குவிடப்படவுள்ளன. எவ்வாறானபோதிலும், இலங்கை மத்திய வங்கிக்குக் கிடைக்கும் மங்கிப் போகாத நல்ல நிலையிலுள்ள பத்து ரூபா நாணயத் தாள்கள் மட்டும் மீளவும் நிதிச் சந்தைக்கு விடப்படும்.
வங்கிகளின் தகவல் மார்க்கங்கள் தெரிவிப்பதற்கு அமைய, சந்தையிலுள்ள நாண யத்தாள்களுள் அதிகளவில் நிறம் மங்கிப் போயுள்ள நாணயத்தாள்கள் 10 ரூபாவே என்று அவர் மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை: