மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனை மோதி விட்டுத் தப்பிச் சென்றது ஹயஸ் வாகனம். தலையிலும் காலிலும் படுகாயமடைந்து மயக்கமடைந்த நிலையில் இளைஞர் யாழ்.போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவர் தலைக்கவசம் அணிந்தும் அதன் பாதுகாப்பு நாடாவைப் பூட்டாமல் சென்றிருக்கலாம் எனத் தலையில் ஏற்பட்ட காயம் மூலமாகச் சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்துச் சம்பவம் நல்லூர் ஆலயத்தின் பின்புறமாகத் திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.
இந்தச் சம்பவத்தில் பருத்தித்துறை ஓடக்கரையைச் சேர்ந்த செ.பிரதீபன் (வயது24) என்ற இளைஞனே படுகாயமடைந்த வராவார்.
இவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் பயிற்சியிலுள்ள தாதிய உத்தியோகத்தர் ஆவார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக