வியாழன், 28 ஜூலை, 2011

யாழ். புற்றுநோய் பிரிவுக்கு நடைபயணம் மூலம் 1350 இலட்சம் திரட்டு!


யாழ்.போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் பிரிவொன்றை அமைப்பதற்கு நிதி திரட்டும் நடைப்பயணம் நேற்றைய தினம் பருத்தித்துறை முனையடியில் முடிவடைந்தது. யாழில். சிறுவர்களுக்கான புற்றுநோய் பிரவொன்றை அமைப்பதற்கு நிதி திரட்டும் முகமாக தென்னிலங்கையில் இருந்து கடந்த முதலாம் திகதி ஆரம்பித்த நடைப்பயணம் 27ஆவது நாளுடன் முடிவுக்கு வந்தது.

'உயிர்களை காக்க உயிர் வாழ்பவர்களின் பயணம்' என்ற தொனிப்பொருளில் இடம்பெறும் இந்த நடைப்பயணத்தில் இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் அணித்தலைவர்களான குமார் சங்ககார,மஹேல ஜெயவர்த்தன ,அன்ஜலோ மத்தியூஸ் ,குத்துசண்டை வீரர் மஞ்சு வன்னியாரச்சி ஆகியோரும் இணைந்து கொண்டிருந்தனர்.

27 நாள் நடைபவனி மூலம் ஆயிரத்து 350 ரூபாய் இலட்சம் நிதி திரட்டப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நடைப்பயணத்துக்கு அதரவு தெரிவித்து வீதியருகில் கூடியிருந்த ரசிகர்களின் ஆதரவுடனும் அரச அலுவலகங்களிலும் மற்றும் இராணுவ சாவடிகளிலும் மரியாதை செலுத்தும் நிகழ்வுகளும் இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது






கருத்துகள் இல்லை: