தொண்டமானாறு ஊடான அச்சுவேலி – பருத்தித்துறை வீதி இன்று ஜுலை 10ம் திகதி திறக்கப்படுமென யாழ் இராணுவக் கட்டளைப் பணியக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 1980ம் ஆண்டு பாதுகாப்புக் காரணங்களுக்காக தொண்டமானாறு ஊடான அச்சுவேலி – பருத்தித்துறை வீதி மூடப்பட்டது.இந்த வீதியைத் திருத்தி மீண்டும் மக்கள் பாவனைக்குக் கையளிக்கும் பணியில் தற்போது இராணுவத்தினரின் பொறியியல் பிரிவினர் ஈடுபட்டிருப்பதாக இராணுவ ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதி திருத்தப் பணிகளை, யாழ் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க நேரில் பார்வையிட்டு தேவையான உத்தரவுகளை வழங்கியதாகவும் அந்தச் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக