கொழும்புக்கும் கிளிநொச்சிக்கும் இடையில் விசேட விமான சேவையொன்று நடத்தப்படவுள்ளது. எதிர்வரும் 28 ம் திகதி இந்த விமான சேவை ஆரம்பிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
விமானப்படையின் ஹெலிகொப்டர் பிரிவினால் இந்த உள்ளுர் விமான சேவை நடத்தப்படவுள்ளது.
வை 12 ரக விமானங்கள் இந்த உள்ளுர் விமான சேவைக்காக பயன்படுத்த உள்ளதாகவும் சுமார் 15 பயணிகள் விமானத்தில் பயணம் செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பயணக் கட்டணமாக ஒருவரிடமிருந்து 7500 ரூபா அறவீடு செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக