சனி, 30 ஜூலை, 2011

மீள்குடியேற்ற பிரதேசங்களில் சமுர்த்தி திட்டம் அமுல்

வடக்கில் மீள் குடியேற்றம் பூர்த்தியான சகல பிரதேசங்களிலும் சமுர்த்தி திட்டத்தை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அரசாங்க அதிபர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொழும்பில் நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அரசாங்க அதிபர்களுக்கான மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட போதே வடக்கு மாவட்டச் செயலாளர்களிடம் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வடக்கில் இடம்பெற்றுவரும் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் மாவட்ட நிர்வாக நடவடிக்கைகளில் எதிர்கொள்ள நேரும் பிரச்சினைகள் தொடர்பாகவும் இந்நிகழ்வின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மாவட்டச் செயலாளர்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளதுடன் குடும்ப பொருளாதார திட்டமான �திவி நெகும கம நெகும கிராமிய எழுச்சித் திட்டம் தொடர்பிலும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

வடக்கில் குறிப்பாக வவுனியா கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் சமுர்த்தி திட்டத்தினை விரைவாக ஆரம்பித்து அதன் பயன்களை மக்கள் அனுபவிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் இதன் போது வலியுறுத்தினார். 

கருத்துகள் இல்லை: