எண்பதுக்கு மேற்பட்ட நாடுகள் பங்கு பற்றிய 42 வது சர்வதேச பௌதிகவியல் ஒலிம்பியாட் போட்டியில் யாழ். சென்பற்றிக்ஸ் கல்லூரி உயர்தர மாணவன் சிவபாலன் செல்வநித்திலன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இதுவரை காலமும் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் இலங்கைக்குக் கிடைத்த முதலாவது வெள்ளிப் பதக்கம் இதுவாகும்.
எண்பதுக்கு மேற்பட்ட நாடுகள் பங்கு பற்றிய 42 வது சர்வதேச பௌதிகவியல் ஒலிம்பியாட் போட்டி தாய்லாந்தில் கடந்த 10 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நடைபெற்றது.
இதில் யாழ். சென்பற்றிக்ஸ் கல்லூரி உயர்தர மாணவன் சிவபாலன் செல்வநித்திலன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இதுவரை காலம் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் இலங்கைக்குக் கிடைத்த முதலாவது வெள்ளிப் பதக்கம் இதுவாகும்.
இந்தப் போட்டிக்காக மாணவர்களைத் தெரிவு செய்து பயிற்சி அளித்து அனுப்பும் பணியை, கொழும்புப் பல்கலைக்கழக பௌதிகவியல் துறையும், இலங்கை பௌதிகவியல் நிறுவனமும் 2005 ம் ஆண்டு முதல் இணைந்து செயற்படுத்தி வருகின்றன.
ஜீ.சி.ஈ. உயர்தர வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கிடையில் ஆண்டு தோறும் அகில இலங்கை ரீதியாக நடைபெறும் இலங்கை பௌதிகவியல் போட்டிப் பரீட்சையில் அதி உயர் புள்ளிகள் பெற்ற மாணவர்களே ஆசிய மட்டப் போட்டிக்கும், பின்னர் சர்வதேச மட்டப் போட்டிக்கும் தெரிவுசெய்யப்படுகின்றனர்.
மாணவன் செல்வநித்திலன் 2010 ஜூலை மாதம் நடைபெற்ற அகில இலங்கை பௌதிகவியல் ஒலிம்பியாட்டில் 100 புள்ளிகள் பெற்று ஆசிய மட்டப் போட்டிக்கான எண்மர் குழுவுக்குத் தெரிவானார்.
மாணவன் செல்வநித்திலன் 2010 ஜூலை மாதம் நடைபெற்ற அகில இலங்கை பௌதிகவியல் ஒலிம்பியாட்டில் 100 புள்ளிகள் பெற்று ஆசிய மட்டப் போட்டிக்கான எண்மர் குழுவுக்குத் தெரிவானார்.
17 ஆசிய நாடுகள் பங்குபற்றிய, இஸ்ரேல் நாட்டில் 2011 மே மாதம் நடைபெற்ற இந்த 12 வது ஆசிய பௌதிகவியல் ஒலிம்பியாட்டில் கௌரவக் குறிப்புச் சான்றிதழ் பெற்ற ஒரேயொரு இலங்கையர் இவராவார்.
தொடர்ந்து தாய்லாந்தில் நடந்த 42 ஆவது சர்வதேச பௌதிகவியல் ஒலிம்பியாட்டில் பங்கு பற்றிய ஐவர் கொண்ட இலங்கைக் குழுவிலும் இடம்பெற்ற இவர், இந்தப்போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்ற முதல் இலங்கையர் என்ற பெருமையைப் பெறுகின்றார்.
மேலும் இந்தக் குழுவைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் வெண்கலப் பதக்கங்களையும், ஒருவர் கௌரவ குறிப்புச் சான்றிதழையும் பெற்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக