பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் இன்றைய தினம் (17) இடம்பெற்ற கல்வி மற்றும் விளையாட்டுத்துறைகளில் சாதித்த மாணவர்களுக்கு கேடயங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் மாவட்டத்தின் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி கல்வியில் மிகச் சிறந்த சாதனையாளர்களை உருவாக்கித் தந்த பெருமைக்குரியது.
அந்த வகையில் பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் புனரமைப்புப் பணிகளுக்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சினூடாக நிதியுதவி வழங்கப்படுமெனவும் குறிப்பாக யுத்தத்தால் கல்வியில் பின்னடைவைச் சந்தித்த யாழ் மாவட்டத்தினதும் வடபகுதியினதும் கற்றல் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் பல்வேறு வகைகளிலும் உதவ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு எப்போதும் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக