திங்கள், 25 ஜூலை, 2011

கணவனும் மனைவியும் வெற்றி.



நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வடமராட்சியில் இருவேறு சபைகளில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட கணவனும் மனைவியும் வெற்றி பெற்றுள்ளனர்.
பருத்தித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட ந. நிரஞ்சன் மூன்றாவது உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை பருத்தித்துறை பிரதேச சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட இவரது மனைவியான கிருசாந்தி நிரஞ்சன் வெற்றி பெற்று ஐந்தாவது உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ளூராட்சி மன்றத் தோ்தலில் கணவனும் மனைவியும் ஒரே கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.

கருத்துகள் இல்லை: