இப்படத்தில் திலீப்பின் மாமியாராக குஷ்பு நடிக்கிறார். இப்படத்தின் சூட்டிங் கடந்த ஒரு வாரமாக கொச்சியில் நடைபெற்று வருகிறது. இதற்காக பங்களா போன்று ஒரு செட் அமைக்கப்பட்டு அங்கு சூட்டிங் நடந்து வந்தது. குஷ்பூ மாடிப்படியில் இருந்து இறங்கி வருவது போல ஒரு காட்சியை படமாக்கினார்கள். அப்போது மாடிப்படியின் செட் திடீரென உடைந்தது.
இதில் குஷ்பூ தடுமாறி கீழே விழுந்தார். இதனால் சூட்டிங் ஸ்பாட்டில் பதற்றமும், பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சூட்டிங் உடனடியாக நிறுத்தப்பட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் குஷ்பூ அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள்,
காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதை கண்டறிந்தனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், இரண்டு வாரம் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் மிஸ்டர் மருமகன் படத்தின் சூட்டிங் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக