புதன், 6 ஜூலை, 2011

"எங்களின் அடிப்படை வசதிகளையாவது பெற்றுத்தாருங்கள்” கூட்டமைப்பு எம்.பிக்களிடம் கேட்ட வடமராட்சி மக்கள்







“ஒன்றரை வருடங்களிற்க்கு முன்னர் கொடுத்த தறப்பாளுடன் எந்த விதமான அறிவித்தலுமின்றி திடீரென ஏற்றப்பட்டு வெற்றிலைக்கேணி பாடசாலையில் திறந்தவளிளில் இறக்கப்பட்டு இரவு முளுவதும் பெய்த கனமழையால் நனைந்து பிள்ளைகளைப்பாதுகாக்க எங்களுடைய பணத்தை; கொடுத்து திரும்பவும் வந்து வீதியோரங்களில் கூடாரங்களை அமைத்து வருகின்றோம்.
எங்களின் அடிப்படை வசதிகளையாவது பெற்றுத்தாருங்கள்” என வடமராட்சி கிழக்கில் மீளக்குடியமர்ந்த மக்கள் கூட்டமைப்பு எம்.பிக்களிடம் கண்ணீர் மல்க கேட்டுள்ளனர்.
வடமராட்;சி கிழக்கில் கட்டைக்காடு வெற்றிலைக்கேணி சிச்சியவெட்டை போக்கறுப்பு போன்றபகுதிகளில் சில தினங்களுக்கு முன்னர் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் குறித்த பகுதிகளுக்கு நேற்றய தினம் விஜயம்செய்த கூட்டமைப்பு எம்.பிக்களான சி.சிறிதரன் இ.சரவணபவன் ஆகியோரிடமே மக்கள் மேற்படிக்கோரிக்கையை முன்வைத்தனர்.
இவ்விஜயத்தின்போது மக்கள்மேலும் தெரிவித்ததாவது. திடீரென இராமாவில் முகாமிலிருந்து ஏற்றினார்கள் முன்னர் எந்தவிதமான அறிவித்தல்களும் எமக்குக் கொடுக்கப்படவில்லை. இதனால் வீட்டுப்பொருட்க்களை உரியமுறையில் எடுத்துக்கொள்ளவில்லை. சிறுபிள்ளைகளுக்கான உணவுப்பொருட்க்களை எடுத்துக்கொள்ளவில்லை. ஏறி வந்துவிட்டோம். இரவு திறந்தவெளியில்தான் தங்கவைக்கப்பட்டோம். தொடர்ச்சியாக மழை பெய்துகொண்டிருந்தது.
பெண்கள் அனைவரையும் பாடசாலைக்குள் தங்கிக் கொண்டு ஆண்கள் அனைவரும் மழையில் நனைந்துகொண்டிருந்தார்கள். இன்றைக்கும்(நேற்று) அங்கிருக்க முடியாது என்பதால் எங்களுடைய காசை கொடுத்து காணிகளிற்க்கும் காணிகள் இல்லாதோர் திறந்தவெளிகளில் உள்ள மரங்களிற்க்குக் கீழும் வந்திருக்கின்றோம். தறப்பாள்கள் கூட தரப்படவில்லை. ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் முகாமில் கொடுத்த தறப்பாள்களைக் கொண்டுதான் வந்திருக்கின்றோம்.
மேலும் சிறார்களுக்கான உணவுப் பொருட்க்கள் எவையும் தரப்படவில்லை வசதியுள்ளவர்கள் வாங்கிக் கொடுக்கிறார்கள் வசதியில்லாதவர்கள் மிகுந்த கஷ்டப்படுகின்றார்கள். எங்களுக்கான அடிப்படை வசதிகளையாவது பெற்றுதர நடவடிக்கை எடுங்கள் எனக்கேட்டனர். இதற்க்குப்பதிலளித்த எம்.பிக்கள் இது தொடர்பில் தாம் பாராளுமன்றத்திற்க்குள்ளேயும் வெளியேயும் உரிய தரப்புக்களுடன்பேசி தகுந்த நடவடிக்கைகளை எடுப்போம் என்றனர்.
இதேவேளை மேற்படி விஜயத்தின் பின்னர் கருத்துத் தெரிவித்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் நேற்றய தினம் நாங்கள் நேற்று முன்தினம் வடமராட்சி கிழக்கில் புதிதாக மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதிகளிற்க்கு செல்வதற்க்கு எடுத்த முயற்சி தடுக்கப்பட்டது. அதற்கான காரணம் தொடர்பில் நாம் குழப்பமடைந்திருந்தோம். பின்னர் மீளக்குடியமர்ந்த மக்கள் எமக்கு தொலைபேசி மூலம் தெரிவித்திருந்த கருத்துக்கள் உன்மையானவை என நாம் இன்று(நேற்று) அறிந்திருந்தோம்.
மக்கள் மீளக்குடியேற்றப்பட்டார்கள் என உலகத்திற்க்கு காட்டுவதற்காக சுமாhர் 10 வரையான வீடுகள் மட்டும் அலங்காரமாக கட்டப்பட்டிருக்கின்றது. ஏனை மக்கள் ஏற்பாடுகள் எவையுமில்லாமல் அழைத்துவரப்பட்டு திறந்த வனாந்தரவெளிகளில் விடப்பட்டுள்ளனர். சிறார்கள் எந்த விதமான உணவுப்பொருட்களும் இல்லாமல் கொழுத்தும் வெயிலில் பசி கிடக்கின்றார்கள். நிச்சியவெட்டையிலிருந்து மக்கள் சுமார் 5 கிலோ மீற்றர் துராம் நடந்து வந்து வெற்றிலைக்கேணியிலிருந்து குடிதண்ணீர் எடுத்துச் செல்கின்றார்கள்.
மருத்துவ வசதிகிடையாது இன்று(நேற்று)காலையும் கூட சிறுவனொருவனை பாம்பு கடித்திருக்கின்றது. எனவே இதுதான் நிலைமை மீள்குடியேற்றம் என்பெயரில் ஏற்றிவரப்பட்ட மக்கள் தெருக்களில் விடப்பட்டுள்ளனர். இந்த நிலைமைகள் வெளிக்கொணரப்பட்டு விடும் என்பதால்தான் நாங்கள் அந்தப்பகுதிக்குச் செல்வதற்க்குத் தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்றுகாலை எல்லாம் சரிசெய்யப்பட்டு மக்கள் தாங்களாகவே தமது இடங்களிற்க்குச் சென்றபின்னர் நாம் அங்கு செல்ல அனுமதிக்கப்பட்டோம்.

கருத்துகள் இல்லை: