சீனாவை சேர்ந்த டாக்டர் ஒருவரிடம் ஒரு தம்பதி சமீபத்தில் வந்தனர். தங்களுக்கு குழந்தை பிறக்கவில்லை என்று கூறிய அவர்கள் அதற்கு என்ன சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
அவர்களிடம் பேச்சு கொடுத்த டாக்டர், மண வாழ்க்கை பற்றி விசாரித்தார். அவர்கள் சொன்னதில் டாக்டருக்கு மயக்கமே வந்துவிட்டது. அவர்கள் கூறியது இதுதான்.. ‘‘ஒரே படுக்கையில் படுத்தால் குழந்தை பிறக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.
திருமணம் ஆகி பல நாட்கள் ஆகிறது. அப்போதிருந்தே இருவரும் ஒரே படுக்கையில்தான் படுத்து தூங்குகிறோம். ஆனாலும் குழந்தை பிறக்கவில்லை’’ என்றார்கள்.
அவர்கள் 30 வயதுகளில் இருந்த தம்பதியர். கணவன் பி.எச்டி. முடித்தவர். மனைவி முதுநிலை பட்டதாரி. சிறு வயதில் இருந்து படிப்பிலேயே கவனம் செலுத்தியதால் செக்ஸ் தொடர்பாக தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டவில்லை என்று அவர்கள் கூறினர். ‘‘கல்யாணத்துக்கு முன்பு சிறிது காலம் காதலித்து வந்தோம்.
கையை பிடித்தால், முத்தமிட்டுக் கொண்டால் கர்ப்பமாகிவிடுவாள் என்று பயந்தோம். அதனால், கையைக்கூட தொடாமல் காதலித்தோம்’’ என்றனர் அந்த சுவாரஸ்ய தம்பதிகள்.
செக்ஸ் பற்றி அவர்களுக்கு எதுவுமே தெரியவில்லை என்பதை புரிந்துகொண்டார் டாக்டர்.
அரிவரியில் இருந்து செக்ஸ் கல்வி ஆரம்பிக்கும் கவுன்சலிங் வகுப்புக்கு அவர்களை அனுப்பி வைத்திருக்கிறார் டாக்டர்.
இத்தகவலை சீனாவை சேர்ந்த சின்சியூ நாளிதழ் வெளியிட்டுள்ளது.
அப்ப பாருங்கோவேன் இந்த படித்த முட்டாள்களின் செயற்பாடுகளை?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக