நியூசிலாந்தை நெருங்கும்போது ரோந்தில் ஈடுபட்ட இந்தோனேசிய கடற்படையினரால் 85 இலங்கையர்களும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களையும், கைப்பற்றப்பட்ட கப்பலையும் இந்தோனேசிய கடல் படையினர் இந்தோனேசியாவுக்கு கொண்டு சென்றனர்.
கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் “நாங்கள் நியூசிலாந்திற்கு போக விரும்புகிறோம்”, “எமது எதிர்காலம் நியூசிலாந்தில்” போன்ற பதாகைகளை தாங்கியவண்ணம் அகதிகள் கப்பலில் காணப்பட்டதாக ரொய்ட்டர்ஸ் புகைப்படங்கள் மூலம் அறியமுடிகிறதுபுகலிடக்கோரிக்கையாளர்களின் நிலை குறித்து தான் உணர்வதாகவும், ஆனால் நியூசிலாந்து இவர்களுக்கு உதவி செய்யாது என்றும் நியூசிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.
புகலிடக்கோரிக்கையாளர்கள் கொடிகளையும், பதாகைகளையும் தாங்கியவண்ணம் நியூசிலாந்துக்கு வர விரும்புவதாக வெளிப்படுத்தியதை நான் உணர்ந்தேன்.
ஆனாலும் எமது செய்தி என்னவென்றால் நியூசிலாந்து அவர்களை வரவேற்காது என்பதாகும் என்று பிரதமர் ஜோன் கீ தெரிவித்தார். குறித்த புகலிடக்கோரிக்கையாளர்கள் தாம் சட்டவிரோத குடியேற்றவாசிகள் அல்ல என்றும், ஆனால் நாங்கள் அகதிகளாக நியூசிலாந்திற்கு செல்லவிரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் உதவியையும் கேட்டுள்ளனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக