கிறீஸின் தலைநகர் ஏதென்ஸில் நடைபெற்ற மாற்று வலுவுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற கோண்டாவில் சிவபூமி பாடசாலை மாணவன் செல்வன் சிவராசா துஷ்யந்தனுக்கு நேற்று யாழ். நகரில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இலங்கைக்கும் தமிழினத்துக்கும் பெருமை சேர்த்த துஷ்யந்தனைப் பெரும் எண்ணிக்கையானோர் திரண்டு வரவேற்றனர். இவர் 4*100 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி சார்பாகப் பங்குகொண்டு இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தார்.
கொழும்பில் இருந்து யாழ்பாணம் திரும்பிய துஷ்யந்தன் நேற்று நல்லூரில் இருந்து சிறப்பு ஊர்தியில் "பாண்ட்'' வாத்திய அணி வகுப்புடன் வரவேற்கப்பட்டார். மக்கள் வீதியில் இருபுறமும் திரண்டு நின்று சாதனை வீரனை வரவேற்றனர்.
இந்த வரவேற்பு நிகழ்வில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன், வடமாகாண விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் சி. அண்ணாத்துரை, யாழ். பல்கலைக்கழகப் பேராசிரியர்களான எஸ். சிவலிங்கராசா, அ. சண்முகதாஸ் ஆகியோர் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
பின் கௌரவிப்பு நிகழ்வு சிவபூமி பாடசாலையில் இடம் பெற்றது. இங்கு மாணவனுக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின் கௌரவிப்பு நிகழ்வு சிவபூமி பாடசாலையில் இடம் பெற்றது. இங்கு மாணவனுக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
வாழ்த்துரைகளை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத்தூதரக அதிகாரி வி.மகாலிங்கம், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன், பேராசிரியர் அ. சண்முகதாஸ், பேராசிரியர் எஸ். சிவ லிங்கராஜா, வடமாகாண விளையாட்டுத் திணைக்கள பணிப்பாளர் சி. அண்ணாத்துரை ஆகியோர் உட்பட பலர் விருது வழங்கினர். இந்த வைபவத்தில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் துஷ்யந்தனுக்கு வெற்றிக் கேடயம் வழங்கி கௌரவித்தார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக