இலங்கை போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை சாலையால் வடக்கு - தெற்கு இணைப்புப் பாலமாக பருத்தித்துறையிலிருந்து தேவேந்திரமுனைக்கான பேருந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு நாளை களுத்துறை பேருந்து நிலையத்தில் இடம்பெறவுள்ளது.
சபையின் தலைவர் எம்.டி.பந்துசேனவின் அழைப்பின் பேரில் இலங்கை போக்குவரத்து அமைச்சர் குமாரவெல்கம இதில் பங்குபற்றவுள்ளார்.
இந்த பஸ்சேவை தொடர்பில் பருத்தித்துறை டிப்போ அத்தியடசகர் தெரிவிக்கையில்,
நாளை சனிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ள இந்த பஸ்சேவை இங்கிருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு தேவேந்திர முனையை இரவு 9.30 மணிக்கு சென்றடையும்.
இதேவேளை தேவேந்திரமுனையிலிருந்து காலை 4.30 மணிக்கு குறிப்பிட்ட பஸ்சேவை பருத்தித்துறை நோக்கிப் புறப்படும்.
இந்த பஸ்சேவை கொழும்பு காலி ஊடாக இடம்பெறும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக