ஞாயிறு, 3 ஜூலை, 2011

Facebook & Skype கலியாணம்?

கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு இருக்கும் கூகுள் பிளஸ் சமூக இணைப்பு இணையத் தளத்தை முறியடிப்பதற்காக பேஸ் புக், ஸ்கைப் ஆகிய இரு நிறுவனங்களும் கூட்டு நடவடிக்கை ஒன்றை அடுத்த வாரம் ஆரம்பிக்க உள்ளன என்று இணைய உலகில் பரவலாக பேசப்படுகின்றது. 

பேஸ் புக்கின் பிரதம நிறைவேற்று அதிகாரி Mark Zuckerberg. அடுத்த வாரம் ஒரு அதிசயம் இடம்பெற உள்ளது என இவர் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்து உள்ளார். 

புதிய வரவு ஒன்று பேஸ் புக் பாவனையாளர்களுக்காக காத்திருக்கின்றது என்றார். 

கூகுள் பிளஸ் சமூக இணையத் தளம் பற்றி கூகுள் அறிவித்த நிலையிலேயே பேஸ் புக்கின் பிரதம நிறைவேற்று அதிகாரியின் அறிவிப்பும் ஏட்டிக்கு போட்டியாக வெளி வந்து இருந்தது. 

இந்நிலையில்தான் கூகுள் பிளஸை தோற்கடிப்பதற்காக பேஸ் புக்கும், ஸ்கைப்பும் இணைந்து video conferencing feature ஒன்றை பேஸ் புக்கில் உருவாக்க உள்ளன என்று கதை அடிபடுகின்றது.

பெரும்பாலும் இப்புதிய அம்சம் எதிர்வரும் 06 ஆம் திகதி முதல் அறிமுகம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை: