சனி, 2 ஜூலை, 2011

மான் குட்டிக்கு முலைப் பால் ஊட்டும் சிங்களப் பெண்!

இலங்கையின் பதுளை மாவட்டத்தில் உள்ள போபிட்டிய இடத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் மான் குட்டிக்கு முலைப் பால் ஊட்டி வருகின்றார். 

இவரின் பெயர் மாலா மங்கலிக்கா. கணவனின் பெயர் உபாலி ஜயதிலக. 

இத்தம்பதிகளுக்கு ஐந்து குழந்தைகள். 

15, 11, 08, 06 என்று பாடசாலை செல்கின்ற வயதில் நால்வர். 

இவர்களுடன் 07 மாத கடைக்குட்டி. கடைக்குட்டிக்கு பெயர் மதுரா. 

உபாலி ஒரு சமயம் காட்டுக்கு சென்று இருந்தார். 

மான் குட்டி ஒன்று தாயைப் பிரிந்து தவித்துக் கொண்டிருந்தது. 

வீட்டுக்கு கொண்டு வந்தார். மான் குட்டிக்கும் முலைப் பால் ஊட்டத் தொடங்கினார் மங்கலிக்கா. 

தற்போது இது வாடிக்கை ஆகி விட்டது. முற்பிறப்பில் மான் குட்டி அவரின் பிள்ளையாக பிறந்திருக்க வேண்டும் என்று மங்கலிக்கா விசுவாசுக்கின்றார். 

இம்மான் குட்டியை வீட்டில் வளர்க்க அரச அனுமதியை கோரி உள்ளார்.

கருத்துகள் இல்லை: