யாழ்ப்பாணத்தில் புற்று நோயாளர்களுக்கு தரமான சிகிச்சை வழங்குவதற்காகவும் புற்று நோய் சிகிச்சை முறையினை யாழ்பாணத்தில் நவீன மயப்படுத்தும் நோக்கில் சுப்பிமணியம் ஸ்ரீகாந்தன் என்ற இளைஞன் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சைக்கிள் பயணம் ஒன்றினை ஆரம்பித்து இருக்கின்றார்.
இன்றையதினம் நல்லூர் கோவில் முன்றலில் இருந்து தனது பயணத்தினை ஆரம்பித்தார். இவர் நாளைய தினம் வவுனியாவில் இருந்து புத்தளத்துக்கும் நாளை மறுதினம் புத்தளத்தில் இருந்து கொழும்பு நோக்கியும் செல்லவுள்ளார்.
தென்னிலங்கையில் தெய்வேந்திர முனையில் இருந்து பலர் பருத்தித்துறை முனை வரை நடத்து வந்து பல லட்சம் ரூபா நிதியினை சேகரித்து யாழ் புற்று நோய் சிகிச்சையினை நவீனமயப்படுத்த உதவி செய்ய இருக்கிறார்கள்.
இச் செயல்பாட்டில் மூவின மக்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந் நடவடிக்கைக்கு ஒரு தொடர்பினை ஏற்படுத்தும் முகமாக இச் சைக்கிள் பயணம் அமைய இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக