ஞாயிறு, 31 ஜூலை, 2011

Aircel 'லில் ஒரு வருடத்திற்கு இலவசமாக SMS அனுப்பலாம்.

Aircel 'லில் ஒரு வருடத்திற்கு இலவசமாக SMS அனுப்பலாம்.  நாம் அதிகமாக உபயோகிக்கும் மொபைல் Operator 'களில் Aircel  இரண்டாவது இடத்தில் உள்ளது.  இந்த ஆபர் குறுகிய காலம் மட்டுமே.  இதை உடனே Activate செய்து பயன் பெறுங்கள்.இதற்க்கான வழிமுறைகளை கீழே கொடுத்துள்ளேன்.



உங்கள் மொபைல் 'லில் இருந்து TP என டைப் செய்து 56666 க்கு SMS  அனுப்புங்கள்.


இதற்க்கான  கட்டணம்  ரூ: 4 /- மட்டுமே.   SMS செய்த ஒரு மணி நேரத்தில்  Activate செய்யப்படும். -நன்றி நண்பர் 
சு. ராபின்சன்-

தந்தைக்கு கிரியை செய்த மகன் யாழில் பரிதாப மரணம்

ஆடி அமாவாசையான நேற்றைய தினம் இரவு தந்தையாருக்காக மோட்ச கிரியைகளை மேற்கொண்ட நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நேற்று யாழ் வடக்கில் பதிவாகியுள்ளது. கோவிலில் பூஜை நடவடிக்கைகளை மேற்கொண்டுவிட்டு கீரிமலை தீர்தக்கேணியில்

முழுகச் சென்ற நபரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மாணிப்பாய் சுதுமலையில் வசித்துவந்த 32 வயதான விஜிதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளa ர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்


மீண்டும் குலுங்கியது ஜப்பான் ! பீதியில் மக்கள்

ஜப்பான் நாட்டில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பெரும் பீதியடைந்தனர். ஜப்பானில் கடந்த மார்ச் 11-ந்தேதி பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டது. அதில் 20 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

புகுஷிமாவில் உள்ள அணு உலையில் பாதிப்பு ஏற்பட்டு, அதனால் கதிர் வீச்சு வெளியானது. எனவே அங்கு மறு சீரமைப்பு பணிகள் நடை பெற்று வருகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே, பூகம்பம் ஏற்பட்ட ஹோன்சு கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. இவாகி என்ற இடத்தில் அதிகாலை 3.54 மணிக்கு இந்த நில நடுக்கம் உண்டானது. இதனால் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கின. எனவே, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

அலறியடித்த படி எழுந்த அவர்கள் குழந்தைகளுடன் வீடுகளை விட்டு வெளியேறி விடிய விடிய வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். இதற்கிடையே, அங்கு 6.4 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவானதாக ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இவாகி பகுதியில் பூமிக்கு அடியில் 44 கி.மீட்டர் ஆழத்தில் இது ஏற்பட்டதாகவும் அறிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் இவாகி மற்றும் அதை சுற்றி 100 கி.மீட்டர் பரப்பளவில் உணரப்பட்டது. தலைநகர் டோக்கியோவிலும் கட்டிடங்கள் குலுங்கின.

ஏற்கனவே பாதிப்பு ஏற்பட்ட புகுஷிமா நகரிலும் நில நடுக்கம் கடுமையாக இருந்தது. இதனால், அங்குள்ள அணு உலைக்கு பாதிப்பு எதுவும் ஏற்பட வில்லை. நிலநடுக்கத்தால் அலைகள் அதிக உயரத்துக்கு எழுந்தாலும் சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்படவில்லை.

இன்றைய நிலநடுக்கத்தால் காயமடைந்தவர்கள், சேதம் தொடர்பான விபரங்கள் இன்னமும் வெளியாகவில்லை.


மட்டக்களப்பில் அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கு இராணுவ பாதுகாப்பு


மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் மற்றும் அரசாங்க வங்கிகளுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. புத்தூர் வங்கிக் கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் காணப்படும் அரசாங்க மற்றும் தனியார் துறைக்குச் சொந்தமான 54 வங்கிகளுக்கு இவ்வாறு விசேட இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
வங்கிகளின் பாதுகாப்பு தொடர்பில் வங்கி உயரதிகாரிகளுடன் இராணுவத்தினர் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இதேவேளை, சட்டவிரோத ஆயுதங்களைப் பயன்படுத்துவோருக்கு எதிராக வழக்குத் தொடரப்படவுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான காலக்கெடு இன்றைய தினத்துடன் முடிவடைகின்றது.
நாளை முதல் சட்டவிரோத ஆயுதங்களைப் பயன்படுத்தும் நபர்களை கைது செய்து அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய இராணுவத்தினரும் பொலிஸாரும் உத்தேசித்துள்ளனர்.
எதிர்வரும் காலங்களில் சட்டவிரோத ஆயுதங்களைப் பயன்படுத்துவோரை கண்டு பிடிக்கும் நோக்கில் கிழக்கு மாகாணம் முழுவதிலும் திடீர் சோதனைகள் நடத்தப்பட உள்ளது.
தேடுதல்களின் போது தேவை ஏற்பட்டால் குறைந்தளவான அதிகாரங்களை பயன்படுத்தலாம் என கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி பொனிபஸ் பெரேரா படையினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

எங்கள் ஊருக்குள்ளே...


பட உதவி;www.pointpedromunai.com,  நன்றி டொமினிக் 

சனி, 30 ஜூலை, 2011

வடமராட்சியில் அபூர்வ வெள்ளை நாகம் பிடிபட்டது..

வடமராட்சி பருத்தித்துறை நகர்ப் பகுதியில் அபூர்வமான வெள்ளை நாகபாம்பு ஒன்று பிடிபட்டுள்ளது.

பருத்தித்துறை தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள வீடொன்றில் இப்பாம்பு பிடிக்கப்பட்டது. பின்னர் தபாலகத்தில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. மாலையில் நாகர்கோவில் நாகதாம்பிரான் ஆலய பகுதியில் விடப்பட்டது. இப்பாம்பை நூற்றுக் கணக்கான மக்கள் பார்வையிட்டுச் சென்றனர்.    



யாழ்ப்பாணத்தில் திருமணம் செய்ய வந்த யேர்மன் மாப்பிள்ளை தரகரைத் தாக்கி விட்டு ஓட்டம்

யேர்மனியில் இருந்து வந்த மாப்பிள்ளை மணப் பெண்ணிற்கு 7 மாதங்களேயான தம்பி இருப்பதை அறிந்து தனக்கு சம்பந்தம் பேசிய தரகரை நையப் புடைத்து விட்டு மீண்டும் யேர்மனி சென்ற சம்பவம் தென்மராட்சியில் இடம்பெற்றுள்ளது. யேர்மனியில் 9 வருடங்களாக குடும்பத்தினருடன் வசித்து வந்த 27 வயதான கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞனுக்கு அவனது குடும்ப்ததினர் திருமணத் தரகர் மூலமாக யாழ்ப்பாணத்தில் மணப்பெண் தேடியுள்ளார்கள்.

இந் நிலையில் அத் தரகரினால் கடந்த ஏப்ரல் மாதம் தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை நிச்சயப்படுத்தி இருந்துள்ளார்கள். திருமணம் செய்வதற்காக வருகின்ற ஆவணி மாதம் நாள் எடுத்து விட்டு மாப்பிளை தனது தாய் மற்றும் சகோதரியுடன் இரு மாதங்கள் விடுமுறை எடுத்து யாழ்ப்பாணம் வந்துள்ளார்.

யாழ்ப்பாணம் வந்த அவரை அப் பெண்ணின் தகப்பன் சந்தித்ததாக தெரியவருகின்றது. தானும் தனது மனைவியும் கடந்த நான்கு வருடங்களாக பிரிந்து வாழ்வதாகவும் ஆனால் தனது மனைவிக்கு தற்போது 7 மாதக் குழந்தை இருப்பதாகவும் தந்தை தெரிவித்துள்ளார்.

மிகுந்த மது போதையில் இருந்த அவரது பேச்சை நம்பாது மாப்பிளை வீட்டார் திருமணத் தரகரை அழைத்து விசாரித்து உள்ளார்கள். அப்போது திருமணத் தரகர் தாய்க்கு குழந்தை இருப்பது உண்மை எனவும் ஆனால் தந்தை சொல்வது போல் நீண்ட காலம் பிரிந்து வாழவில்லை என்றும் கடந்த டிசம்பர் மாதம் தொடக்கமே தந்தை பிரிந்து வாழ்வதாகவும் கூறியுள்ளார்.

இதனைக் கேட்ட திருமணம் செய்ய வந்த இளைஞன் பாய்ந்து சென்று தரகரை நையப்புடைத்துள்ளான். அத்துடன் மணப் பெண்ணின் தாய்க்கு இவ்வாறு குழந்தை இருப்பதை ஏன் முதலில் சொல்லவில்லை என கேட்டும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

தரகர் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அடுத்த நாள் மணப்பெண்ணின் தாயின் சகோதரர் குறிப்பிட்ட இளைஞனின் வீட்டுக்கு மது போதையில் வந்து தகராறு செய்ததாகவும் இதனை அடுத்து பொலிஸ் நிலையத்தில் அவர்கள் முறையிட்டு விட்டு தற்போது யேர்மன் திரும்பியுள்ளதாகவும் தெரியவருகின்றது.


உயிரணுக்களை பாதிக்கும் மடி கணினி

ஆடம் ஆஸ்பார்ன் (Adam Osborne) என்பவரால் 1981 ஆம் ஆண்டு மடிக் கணினி கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் மிக கனமாயிருந்து, தற்பொழுது ஒன்றிலிருந்து 1.50 கிலோவிற்குள் வெவ்வேறு மாடல்களில் கிடைக்கிறது.

இன்றைய கணினி யுகத்தில் அலுவலகம் செல்வோரும், கல்லூரி மாணவ மாணவிகளும், வியாபார இடங்களிலும் ஆண்களாலும், பெண்களாலும் கணினியும், மடிக் கணினியும் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. ஆண்களும், பெண்களும் மடிக் கணினியை மடியில் வைத்து தொடர்ந்து பல மணி நேரம், பல நாட்கள் பயன்படுத்துவதால் அவர்களையறியாமல் பாதிக்கப்படுகின்றனர்.

பெண்களை விட ஆண்கள் பெருமளவில் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. பொதுவாக ஆண்கள் உட்காரும்பொழுது கால்களை சற்று அகலமாக விரித்து உட்காருவது வழக்கம்.

இது அவர்களின் விதைப் பையையும், (Scrotum and Testicles) விதைக் காய்களையும் தகுந்த வெப்பத்தில் இருக்க உதவுகிறது. மடிக் கணினி உபயோகப்படுத்தும் போது கால்களை சற்று நெருக்கமாக வைத்து கணினியைத் தாங்கி பிடிப்பதால் கால்களுக்கிடையில் வெப்பம் அதிகமாக செல்கிறது.

இது விதைப்பையின் வெப்பத்தை வழக்கத்தைவிட சுமார் 2.7 டிகிரி சென்டிகிரேட் அதிகமாக்குகிறது. இதனால் குழந்தை பெறும் தகுதியுள்ள ஆண்களுக்கு உயிரணுக்களின் (Sperm Count) எண்ணிக்கை 10 வருடங்களில் மூன்றில் ஒரு பங்கு குறைய வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.

நீண்ட நாட்கள் மடிக் கணினியை மடியில் வைத்துப் பயன்படுத்துபவர்களுக்கு தொடையின் முன் நடுப்பகுதியில் தோலிலும் அதன் அடியிலும் மாற்றம் ஏற்படுகிறது.

மடிக் கணினி உபயோகிக்கும் போது இதன் அடிப்பாகத்தில் பேட்டரியினால் அல்லது மின்சாரத்தினால் இளஞ்சூடு உண்டாகிறது. இதனால் தோலுக்கு அடியில் உள்ள சிறு ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, தோல் சில நாட்களில் சிவந்தும், சிறு சிறு சிவந்த கோடுகளாகவும் நிற மாற்றத்துடன் காணப்படுகிறது.

இது வெளி நாடுகளில் மடிக் கணினி உபயோகப்படுத்தும், இளம் பெண்களுக்கு, குறிப்பாக நாகரிக அரை டிராயர் (Half Trouser) அணிந்து வெளியே செல்பவர்களுக்கு தோல் மாற்றம் மன வருத்தத்தைத் தருகிறது. இந்த நிற மாற்றத்துடன் கூடிய, சிவந்த தோற்றத்துடனான பாதிப்புக்கு Erythema Ab Igne அல்லது Toasted Skin Syndrome என்று பெயர்.

இது நீண்ட நாட்கள் மடிக் கணினி உபயோகத்தினால் விட்டு விட்டு ஏற்பட்ட இளஞ்சூட்டினால் வரலாம். வேறு சிலருக்கு வலி நிவாரணத்திற்கு உடலின் மற்ற பாகங்களில் நீண்ட நாட்கள் தரப்படும் வெந்நீர் ஒத்தடப் பைகளின் சூட்டினாலும் அந்தந்த பகுதிகளில் இத்தகைய தோல் மாற்றங்கள் வரலாம். இந்த பாதிப்பை பாதிக்கப்பட்டவரிடம் மருத்துவரின் விசாரிப்பினாலும், பரிட்சித்துப் பார்ப்பதினாலும் கண்டறியலாம்.

எனவே, இளம் வயது பள்ளி, கல்லூரி மாணவர்களும், வேலை மற்றும் தொழில் செய்யும் அனைத்து ஆண்களும் மடியில் கணினி வைத்து பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இளம் வயது பையன்களும், இளைஞர்களும், பெண்களும் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் மடிக் கணினியை தாழ்வான மேசைகளில் வைத்து உபயோகப்படுத்தலாம்.

ஆண்கள் மடிக் கணினியின் தவறான பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய உயிரணுக்கள் குறைவுப் பிரச்னையையும், ஆண், பெண் இருபாலார்க்கும் முன் தொடைப் பகுதியில் ஏற்படக்கூடிய சிகப்பு மற்றும் தோலில் மாற்றம் ஆகியவற்றையும் தவிர்க்க மடிக் கணினியை எச்சரிக்கையாகப் பயன்படுத்துவோம்.

மீள்குடியேற்ற பிரதேசங்களில் சமுர்த்தி திட்டம் அமுல்

வடக்கில் மீள் குடியேற்றம் பூர்த்தியான சகல பிரதேசங்களிலும் சமுர்த்தி திட்டத்தை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அரசாங்க அதிபர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொழும்பில் நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அரசாங்க அதிபர்களுக்கான மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட போதே வடக்கு மாவட்டச் செயலாளர்களிடம் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வடக்கில் இடம்பெற்றுவரும் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் மாவட்ட நிர்வாக நடவடிக்கைகளில் எதிர்கொள்ள நேரும் பிரச்சினைகள் தொடர்பாகவும் இந்நிகழ்வின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மாவட்டச் செயலாளர்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளதுடன் குடும்ப பொருளாதார திட்டமான �திவி நெகும கம நெகும கிராமிய எழுச்சித் திட்டம் தொடர்பிலும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

வடக்கில் குறிப்பாக வவுனியா கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் சமுர்த்தி திட்டத்தினை விரைவாக ஆரம்பித்து அதன் பயன்களை மக்கள் அனுபவிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் இதன் போது வலியுறுத்தினார். 

இன்று ஆடி அமாவாசை நாடு முழுவதிலும் பக்திபூர்வமாக அனுஷ்டிப்பு

இந்துக்கள் அனைவரும் புனிதமாக கருதும் ஆடி அமாவாசை தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

எள்ளு துளசி கொண்டு தர்ப்பணம் செய்து பிதிர் கடன்களைத் தீர்க்கும் புனித தினமாக இன்று கருதப்படுகிறது. மறைந்த தன் உறவுகளை நினைவு கூர்ந்து அவர்களது ஆத்மா சாந்தியடைய வேண்டி இன்றையநாளில் பிதிர் கடன் தீர்த்தல் நடைமுறையாகும்.

பஞ்ச ஈஸ்வரங்கள் என்று கூறப்படும் முன்னேஸ்வரம் திருக்கேதீஸ்வரம் நகுலேஸ்வரம் கோணேஸ்வரம் உட்பட சகல இந்து ஆலயங்களிலுமுள்ள தீர்த்தங்களில் பிதிர் கடன் தீர்க்கும் நிகழ்வுகள் இன்று நடைபெறுகின்றன.

நகுலேஸ்வரம் கீரிமலை தீர்த்தத்திலும் முன்னேஸ்வரம் மாயவனாற்றிலும் திருக்கேதீஸ்வரம் பாலாவி தீர்த்தத்திலும் கொழும்பு முகத்துவாரத்திலும் விசேடமாக பிதிர் கடன் தீர்க்கும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

வடமாகாணத்தில் உள்ள சிவாலயங்களில் ஆடி அமாவாசை விசேட பூஜைகள் நடாத்துவதற்கான ஆலோசனைகளை மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு வழங்கியுள்ளது.

ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் வடமாகாண ஆளுநர் இதற்கான பணிப்புரையினை பிரதேச செயலாளர்களுக்கு வழங்கியுள்ளார். 

வெள்ளி, 29 ஜூலை, 2011

ராணா படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்

ரஜினியின் உடல்நிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ”ராணா” படப்பிடிப்பு வரும் ஒக்டோபர் 3 ம் திகதி மீண்டும் தொடங்குகிறது. ரஜினிகாந்த் 3 வேடங்களில் நடிக்கும் படம் ”ராணா”.

கடந்த ஏப்ரல் 29 ம் திகதி இப்படத்தின் தொடக்க விழாவுடன் சூட்டிங் தொடங்கியது. அப்போது ரஜினிகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பது கண்டறியப்பட்டதால் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்றார் ரஜின

சிகிச்சை முடிந்து கடந்த 13 ம் திகதி சென்னை திரும்பினார். டொக்டர்கள் அறிவுரைப்படி தனது போயஸ் தோட்ட இல்லத்தில் அவர் ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில் ”ராணா” பட சூட்டிங் விரைவில் தொடங்குவது பற்றி ரஜினியும், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரும் ஆலோசனை நடத்தினர்.

ஒக்டோபர் 3 ம் திகதி முதல் சூட்டிங் தொடங்கி தொடர்ந்து 100 நாட்கள் இடைவிடாமல் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ரஜினி பங்கேற்கும் காட்சிகள், அவ்வப்போது சில நாள் இடைவெளி விட்டு படமாக்கப்படும்.

இதற்காக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் பல லட்சம் ரூபாய் செலவில் பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டு வருகிறது.

மன்னராக ரஜினி நடிக்கும் காட்சிகளுக்காக, பிரம்மாண்ட கப்பல் செட் ஒன்றும் அமைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்-2011 யாழ். மாவட்டம்! வேட்பாளர்கள் பெயர் மற்றும் விருப்பு வாக்குகள் விபரம்


யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திற்குட்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான அண்மையில் நடைபெற்ற தேர்தலில் கட்சிகள் ரீதியாக கைப்பற்றிய உள்ளூராட்சி மன்றங்களின் விபரங்கள், வேட்பாளர்கள் விபரங்கள் மற்றும் விருப்பு வாக்குகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழரசுக் கட்சியின் நிர்வாகத்திற்கு வரவுள்ள நகர, பிரதேச சபைகளின் விபரம்
  1. வல்வெட்டித்துறை நகரசபை
  2. பருத்தித்துறை நகரசபை
  3. சாவகச்சேரி நகரசபை
  4. காரைநகர் பிரதேசசபை
  5. வலிகாமம் மேற்கு பிரதேசசபை
  6. வலிகாமம் வடக்கு பிரதேசசபை
  7. வலிகாமம் வடமேற்கு பிரதேசசபை
  8. வலிகாமம் தெற்கு பிரதேசசபை
  9. வலிகாமம் கிழக்கு பிரதேசசபை
  10. வடமராட்சி தென்மேற்கு பிரதேசசபை
  11. பருத்தித்துறை பிரதேசசபை
  12. சாவகச்சேரி பிரதேசசபை
  13. நல்லூர் பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிர்வாகத்திற்கு வரவுள்ள பிரதேச சபைகளின் விபரம்
    14.  ஊர்காவற்றுறை பிரதேசசபை
    15.  நெடுந்தீவுப் பிரதேசசபை
    16.  வேலணைப் பிரதேசசபை
ஒவ்வொரு நகர மற்றும் பிரதேச சபைகளின் வேட்பாளர்களின் பெயர்கள், கட்சிகள் மற்றும் அவர்கள் பெற்ற விருப்பு வாக்குள் அடங்கிய விபரங்கள் வருமாறு:-

1. வல்வெட்டித்துறை நகரசபை
2. பருத்தித்துறை நகரசபை
3. சாவசகச்சேரி நகரசபை
4. காரைநகர் பிரதேசசபை
5. வலிகாமம் மேற்கு பிரதேசசபை
6. வலிகாமம் வடக்கு பிரதேசசபை
7. வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபை
8. வலிகாமம் தெற்கு பிரதேசசபை
9. வலிகாமம் கிழக்கு பிரதேசசபை
10. வடமராட்சி தென்மேற்கு பிரதேசசபை
11. பருத்தித்துறை பிரதேசசபை
12. சாவகச்சேரி பிரதேசசபை
13. நல்லூர் பிரதேசசபை
14.  ஊர்காவற்றுறை பிரதேசசபை
15. நெடுந்தீவுப் பிரதேசசபை
16. வேலணைப் பிரதேசசபை

ரம்ழான் தலைப்பிறை மாநாடு திங்கள்

ஹிஜ்ரி 1432 புனித ரம்ழான் மாதத்திற்கான தலைப்பிறையை பார்த்து தீர்மானிக்கும் மாநாடு எதிர்வரும் (1) திங்கட்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள மத்ரஸதுல் ஹமீதிய்யா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

புனித ரம்ழான் நோன்பை தீர்மானிக்கும் வகையில் அன்றைய தினம் மஃரிப் தொழுகை நேரமாகிய 06.31 மணி தொடக்கம் புனித ரம்ழான் மாதத்திற்கான தலைப் பிறையை பார்க்குமாறு சகல முஸ்லிம்களையும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் கேட்டுக்கொள்கிறது.

அவ்வாறு தலைப்பிறையை கண்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் நேரிலோ அல்லது 011-5234044  2432110 2390783 மற்றும் 0777-366099 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடனோ தொடர்பு கொண்டு அறியத் தருமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் பொதுச் செயலாளர் நதுசான் ஹஸன் கேட்டுக் கொள்கின்றார்.

உலமாக்கள் கதீப்மார்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம் சமய கலாசார திணைக்கள ரீஆ கவுன்ஸில் பிரதிநிதிகள் பள்ளிவாசல் தக்கியாக்கள் சாவியாக்களின் நிர்வாகிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர். 

யாழ்.நகருக்கு அண்மையில் கோஷ்டி மோதல்

யாழ்.நகருக்கு அண்மையில் புகையிரத நிலையத்திற்கு முன்பாக நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்ற இம் மோதலை, சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் வானத்தை நோக்கித் துப்பாக்கியிப் பிரயோகம் செய்து மோதலைக் கட்டுப்படுத்தினர்.

சம்பவதினம் இரவு 8 மணியளவில் ஆஸ்பத்திரி வீதி முலைவைச் சந்தியில் நின்ற ஒரு குழுவுக்கும், புகையிரத நிலைய வீதியில் நின்ற ஒரு குழுவுக்குமிடையே மோதல் வெடித்தது.

இரு தரப்பினரும் போத்தல்கள், கல்லுகளால் மாறிமாறி தாக்கத் தொடங்கினர். இதனையடுத்து அப் பகுதி பெரும் களேபர பூமியாகக் காட்சியளித்தது. அப் பகுதியூடான போக்குவரத்துக்கள் அனைத்தும் தடைப்பட்டன.

வீதி போத்தல் சிதறல்களால் குவிந்து காணப்பட்டது. இச் சம்பவம் தொடர்பாக கேள்வியுற்ற இராணுவத்தினர் விரைந்து சென்று வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்டு மோதலைக் கட்டுப்படுத்தியதுடன் பொலிஸாருக்கும் தகவல் வழங்கினர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ்.பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான குழுவினர் சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேரை கைது செய்ததுடன் மோதல் குறித்த விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை நேற்று முன்தினம் இரவு முழுவதும் அப் பகுதியில் பொலிஸார் பெருமளவு குவிக்கப்பட்டிருந்ததாகப் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஓமந்தையில் ரயிலுடன் லொறி மோதியதில் விபத்து! - மூவர் பலி! ஒருவர் படுகாயம்


கொழும்பிலிருந்து ஓமந்தை நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று லொறியுடன் மோதியதில் ஸ்தலத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்த நிலையில் ஒமந்தைப் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து சம்பவமானது நேற்று வியாழக்கிழமை நண்பகல் 11.30 மணியளவில் நடைபெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
குறிப்பிட்ட புகையிரதம் ஓமந்தை புகையிரத நிலையத்தை அண்மித்தவேளை திடீரென லொறி ஒன்று புகையிரதக் கடவையைக் கடந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஒமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் மதவாச்சியைச் சேர்ந்த லொறியின் சாரதி உதயகுமார் (வயது21) மற்றும் அவருடன் பயணித்த தர்மசீலன் (வயது19) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
அதே லொறியில் பயணித்த மேலும் இருவர் (மஞ்சுதன் வயது 33, தாசன் வயது 48) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ஒமந்தை பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதேவேளை, விபத்தில் காயமடைந்த இருவரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் கிடைத்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


வியாழன், 28 ஜூலை, 2011

யாழ். புற்றுநோய் பிரிவுக்கு நடைபயணம் மூலம் 1350 இலட்சம் திரட்டு!


யாழ்.போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் பிரிவொன்றை அமைப்பதற்கு நிதி திரட்டும் நடைப்பயணம் நேற்றைய தினம் பருத்தித்துறை முனையடியில் முடிவடைந்தது. யாழில். சிறுவர்களுக்கான புற்றுநோய் பிரவொன்றை அமைப்பதற்கு நிதி திரட்டும் முகமாக தென்னிலங்கையில் இருந்து கடந்த முதலாம் திகதி ஆரம்பித்த நடைப்பயணம் 27ஆவது நாளுடன் முடிவுக்கு வந்தது.

'உயிர்களை காக்க உயிர் வாழ்பவர்களின் பயணம்' என்ற தொனிப்பொருளில் இடம்பெறும் இந்த நடைப்பயணத்தில் இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் அணித்தலைவர்களான குமார் சங்ககார,மஹேல ஜெயவர்த்தன ,அன்ஜலோ மத்தியூஸ் ,குத்துசண்டை வீரர் மஞ்சு வன்னியாரச்சி ஆகியோரும் இணைந்து கொண்டிருந்தனர்.

27 நாள் நடைபவனி மூலம் ஆயிரத்து 350 ரூபாய் இலட்சம் நிதி திரட்டப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நடைப்பயணத்துக்கு அதரவு தெரிவித்து வீதியருகில் கூடியிருந்த ரசிகர்களின் ஆதரவுடனும் அரச அலுவலகங்களிலும் மற்றும் இராணுவ சாவடிகளிலும் மரியாதை செலுத்தும் நிகழ்வுகளும் இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது






சாக்கடைக்குள் தலை கீழாகத் தொங்கி தொலைபேசியைத் தேடிய அமெரிக்கர்


சாலையோரத்தில் உள்ள சாக்கடை கழிவு நீரினுள் விழுந்த கைத்தொலைபேசியைத் தேடி குழிக்குள் தலை கீழாகத் தொங்கி தலையை வைத்து தேடும் ஒருவரையே படத்தில் காண்கிறீர்கள்.
21 வயதான Jared Medeiros என்ற அமெரிக்கரே மேற்படி வீரதீரச் செயலில் இறங்கியவராவார்.
இறுதியாக தீயணைப்பு வீரர் ஒருவரின் உதவியுடன் கைத்தொலைபேசி மீட்க்கப்பட்டது.

கொழும்பு – கிளிநொச்சி விமான சேவை இன்று ஆரம்பம்

கொழும்புக்கும் கிளிநொச்சிக்கும் இடையிலான விமான சேவை முதற் தடவையாக இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக விமான படை தகவல்கள் தெரிவித்தன. இலங்கை விமான படையினால் மேற்கொள்ளப்படவுள்ள இந்த சேவை வாரத்தில் ஒரு தடவை இடம்பெறவுள்ளது.

இதற்கான ஒரு வழி கட்டணமாக 7,500 ரூபாய் அறவிடப்படவுள்ளது. இந்த விமானத்தில் 15 பயணிகள் பயணிக்க முடியும்.

விடுதலை புலிகள் இயக்கத்தினரின் கோட்டையாக கிளிநொச்சியில் கடந்த 19ஆம் திகதி இலங்கை விமானப் படை ஓடுபாதையொன்றை திறந்தமை குறிப்பிடத்தக்கது

மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனை மோதிவிட்டு தப்பிச் சென்ற வான்!- நல்லூரில் சம்பவம்


மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனை மோதி விட்டுத் தப்பிச் சென்றது ஹயஸ் வாகனம். தலையிலும் காலிலும் படுகாயமடைந்து மயக்கமடைந்த நிலையில் இளைஞர் யாழ்.போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவர் தலைக்கவசம் அணிந்தும் அதன் பாதுகாப்பு நாடாவைப் பூட்டாமல் சென்றிருக்கலாம் எனத் தலையில் ஏற்பட்ட காயம் மூலமாகச் சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்துச் சம்பவம் நல்லூர் ஆலயத்தின் பின்புறமாகத் திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.
இந்தச் சம்பவத்தில் பருத்தித்துறை ஓடக்கரையைச் சேர்ந்த செ.பிரதீபன் (வயது24) என்ற இளைஞனே படுகாயமடைந்த வராவார்.
இவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் பயிற்சியிலுள்ள தாதிய உத்தியோகத்தர் ஆவார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

புதன், 27 ஜூலை, 2011

கனகராயன்குளத்தில் விதை உற்பத்திப்பண்ணை

உலக வங்கியின் நிதி உதவியுடன் கனகராயன்குளத்தில் 200 ஏக்கர் காணியில் விதை உற்பத்திப் பண்ணை ஆரம்பிக்கப்படவுள்ளது.  இதற்குரிய அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளது என வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.எம்.எஸ்.சாள்ஸ் தெரிவித்தார்.

அதேநேரத்தில் நயினாமடுவில் 200 ஏக்கரில் உயர்தர கால்நடை உற்பத்தி நிலையம் அமைக்க தயாரிக்கப்பட்ட திட்டத்திற்கும் உலக வங்கி நிதி வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.

இரண்டு திட்டங்களும் நிறைவேறும் பட்சத்தில் பிரதேசத்தைச் சேர்ந்த பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சாத்தியங்கள் உள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. 


மோதலுக்குத் தயார் நிலையில் இருந்த 38 பேர் வாள், கத்திகளுடன் சிக்கினர் அல்வாயில் நிகழவிருந்த மோதல் தவிர்ப்பு


வடமராட்சி, அல்வாய்ப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த பெரும் கோஷ்டி மோதல் ஒன்றை நெல்லியடிப் பொலிஸார் முறியடித்துள்ளனர்.
தகவல் கிடைத்து குறிப் பிட்ட இடத்துக்குச் சென்ற பொலிஸார் சுற்றிவளைத்து 38 பேரைக் கைது செய்தனர்.
அல்வாய் வைரவர் கோயிலுக்குச் சமீபமாக அரிவாள், கத்திகள், அசிட் மற்றும் பொல்லுகள், தடிகளுடன் முட்டி மோதிக் கொள்ளத் தயாரான நிலையில் இளைஞர் கள் இருந்தனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. அங்கு எந்த வேளையிலும் மோதல் வெடிக்கலாம் என்ற நிலையில் ஊர்மக்கள் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
அதை அடுத்து பொலிஸார் அங்கு ஜீப்களில் விரைந்து வந்திறங்கி அந்தப் பகுதியைச் சுற்றிவளைத்துக் கொண்டனர். எவரும் தப்பி ஓட முடியாத நிலையில் அனைவரும் ஆயுதங்கள் சகிதம் சிக்கிக் கொண்டனர். ஆலய இசை நிகழ்ச்சி ஒன்றின் போது இளைஞர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட முறுகலே இந்த மோதல் ஆயத்தத்துக்குக் காரணம் என்று கூறப்பட்டது.
பொலிஸாரிடம் சிக்கிய 38 பேரும் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் முன்னிலை யில் ஆஜர் செய்யப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதி வான் 38 பேரில் 36 பேரை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை 14 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். ஏனைய இருவரும் எதிர் வரும் ஓகஸ்ட் மாதம் ஆரம்ப மாகவுள்ள ஜீ.சி.ஈ உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருப்பதால் நீதவான் அவர்களை எச்சரித்து விடுவித்தார்.-நன்றி நெருடல் இணையம்-

யாழ். வடமராட்சியில் குழியில் வீழ்ந்து பலியான 2 வயது பெண்குழந்தை!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறைப் பிரதேசத்தின் வீதியோரத்தில் மின் கம்பம் நடுவதற்காக வெட்டப்பட்ட குழியொன்றினுள் வீழ்ந்து இரண்டு வயதேயான பெண்குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

இன்று மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்மையில் மீள்குடியேற்றப்பட்ட குறித்த பிரதேசத்தில் விளையாடிக்கொண்டிருந்த பெண்குழந்தையே குழியில் வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இதுவரை மின்வசதி வழங்கப்படாத குறித்த பிரதேசத்தில் மின்சாரம் வழங்குவதற்காக அரசினால் மின்கம்பம் நாட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதே இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது

இப்படி ஒரு அன்பா...? (படங்கள் இணைப்பு)

மனிதர்கள் வாழ்கின்ற இதே பூமியால்தான் ஏனைய உயிரினங்களும் வாழ்கின்றன. மனிதர்கள் அவற்றை கொல்லாதபோது, துன்புறுத்தாதபோது, துஷ்பிரயோகம் செய்யாதபோது,

ஒழுங்காக நடத்துகின்றபோது அவையும் பதிலுக்கு உண்மையான அன்பை வெளிப்படுத்துகின்றன.