இளைஞர்களை முதலீடாகக் கொள்ளாத பொருளாதாரம் முறையான ஒன்றல்ல. அவ்வாறான ஒரு முதலீடு எதிர்காலத்தின் அனைவருக்கும் மிகுந்த பயன்தரும் என்று ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தனது சர்வதேச இளைஞர் தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
2000ஆம் ஆண்டு ஓகஸ்ட் 12ஆம் திகதி முதல் முறையாக சர்வதேச இளைஞர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. அதுமுதல் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 12ஆம் திகதி சர்வதேச இளைஞர் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
உலக சமூகத்தில் இளைஞர்களின் முயற்சிகளை அங்கீகரிப்பதும் தத்தமது சமூகங்களுக்கு சாதகமான பங்களிப்பை வழங்கும் வகையில் அவர்களது செயற்பாடுகளை ஊக்குவிப்பதும் சர்வதேச இளைஞர் தினத்தை அனுஷ்டிப்பதன் நோக்கமாகும்.
15 முதல் 24 வயது வரையிலான பிரிவினரை இளைஞர்கள் என்று ஐ. நா. வரையறுக்கிறது. உலக சனத்தொகையில் இந்த வயதுப் பிரிவினர் ஆறில் ஒரு பங்கினர் உள்ளனர். இவர்களில் அதிகமானோர் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலேயே உள்ளனர். இவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.நா. செயலாளர் நாயகம் சர்வதேச இளைஞர் தினத்துக்கான தனது வாழ்த்துச் செய்தியில் இவ்வருட சர்வதேச இளைஞர் தினத்தின் தொனிப்பொருள் உலகத்தை மாற்றுவோம் என்று குறிப்பிடுகிறார். இது இளம் சந்ததியினரை அனைத்து சமயங்களிலும் ஊக்குவிப்பதாக அமையும் என்று அவர் கூறுகிறார்.
உலகில் ஒரு பில்லியனுக்கு மேல் இளம் சந்ததியினர் உள்ளனர். இவர்களில் பலருக்கு கல்வி, சுதந்திரம் ஆகியவற்றுக்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன. அவ்வாறான நிலையிலும் தமக்கான சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஆவல் அவர்களில் பலருக்கு உள்ளது. கடந்த ஒரு வருட காலத்தில் அவர்கள் பல பிரமிக்கத்தக்க பெறுபேறுகளை எட்டியுள்ளனர் என்று அவரது செய்தியில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மேலும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக