தமிழ் - முஸ்லிம் கட்சிகளுக்கு இடையில் கூட்டணி ஒன்றை அமைப்பது குறித்து இரகசிய பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சிறுபான்மை மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் இந்த கூட்டணி உருவாக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட முறிவைத் தொடர்ந்து இந்த இரகசிய முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கு மட்டுமன்றி கிழக்கிலும் பேரம் பேசி உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் இந்த கூட்டணி அமைக்கப்பட உள்ளது.
2013ம் ஆண்டில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களின் போது இந்தக் கூட்டணியின் மூலம் வேட்பாளர்களை களமிறக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக அரசியல் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக