சுற்றுச்சூழலை அழிவுகளிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு உலகைக் காப்பாற்றுவோம் எனும் தொனிப் பொருளில் சைக்கிள் சுற்றுலா ஒன்று யாழ்ப்பாணத்திலிருந்து விரைவில் ஆரம்பமாகவுள்ளது. புவி வெப்பமடைவதால் உலக அழிவுகள் ஏற்படுகின்றன.இரசாயன கழிவுகளால் பூமிக்கும் மனிதர்களுக்கும் தீங்குகள் ஏற் படுகின்றன.
அவற்றை ஈடுசெய்யும் பொருட்டே இந்த சைக்கிள் சுற்றுலாவினை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளோம் எனத் தெரிவித்தார் இதன் ஏற்பாட்டாளர் கா.ராஜரட்ணசிங்கம் குணசேகர. யாழ்.பொதுநூலகத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
சுற்றுச் சூழலில் மனிதர்களுக்கு ஏற்படும் அழிவுகளை மாற்றீடு செய்யும் பொருட்டு யாழ்ப்பாணத்திலிருந்து இந்தச் சுற்றுலா ஆரம்பமாகவுள்ளது.இந்தத் திட்டத்தை 5 வருட திட்டமாக செயற்படுத்தவுள்ளோம். முதலில் இலங்கையைச் சுற்றி சைக்கிள் பவனி வந்ததன் பின்பு, உலகம் முழுவதிலும் உள்ள 40 நாடு களில் சுற்றுப் பயணம் செய்து உலக சாதனை படைப்பதே எமது எண்ணமாக உள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பமாக வுள்ள சைக்கிள் சுற்றுலாவுக்கு ஒரு குழு சேர்ந்துள்ளது. கழகங்கள் ஊடாக எமக்கு ஆதரவு தேவை. அத்துடன் அன்பளிப்பு, நன் கொடைகள் என்பவற்றையும் நாம் எதிர் பார்க்கின்றோம்என்றார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக