புதன், 10 ஆகஸ்ட், 2011

ஓடும் பேருந்தில் கணவன் மனைவி கட்டிப் பிடித்துச் சண்டை - இருவர் மீதும் பயணிகள் தாக்குதல்

கொடிகாமத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேரூந்தினு்ள் மது போதையடன் ஏறிய தம்பதியினர் பின்னர் அதற்குள் இருந்து தகாத வார்த்தைகளால் கட்டிப் பிடித்துச் சண்டையிட்டுள்ளனர்.

அருகில் இருந்தவர்களின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாது சண்டை தொடர்ந்ததால் பேரூந்தின் நடத்துனர் மற்றும் சாரதி ஆகியோர் இருவரையும் வரணிப் பகுதில் இறக்கினர்.

இதனால் கோபமடைந்த தம்பதியினர் பயணிகள் மற்றும் சாரதி, நடத்துனர் மீது தகாத வார்த்தைப் பிரயோகம் செய்துள்ளனர். இதையடுத்து பேரூந்தை விட்டு இறங்கிய பயணிகள் சிலர் இவர்களை நையப்புடைத்ததாகத் தெரியவருகின்றது.

கருத்துகள் இல்லை: