மன்னார் மடுமாதா திருத்தலத்தின் வருடாந்த ஆகஸ்ட் மாத திருவிழா நாளை சனிக்கிழமை மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.
14 ஆம் திகதி வரையும் நவநாள் வழிபாடுகளும் திருப்பலியும் இடம்பெறும். 14 ஆம் திகதி மாலை விசேடமாக நற்கருணை ஆராதனை வழிபாடும் திருப்பலி பவனி ஆசீர்வாதம் என்பன நடைபெறும்.
கன்னிமரியாளின் விண்ணேற்பு தினமான 15 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6.30 மணிக்கு ஆயர்கள் இணைந்து கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுப்பார்கள்.
பக்தர்களுக்காக குடிநீர் சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மடு ஆலய பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியானுஸ்பிள்ளை அடிகளார் தெரிவித்தார்.
இதேவேளை பக்தர்களின் போக்குவரத்துக்காக மேலதிக பஸ் சேவைகள் மடு வரைக்கும் விசேட ரயில் சேவை மதவாச்சி ரயில் நிலையம் வரையும் நடத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக