சனி, 27 ஆகஸ்ட், 2011

வானூர்தி பூ மழை பொழிய, பக்தர்கள் வடம் பிடிக்க, தேரேறித் திருவீதியுலா வந்தான் திருமுருகன்

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 04.08.2011 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, இன்றைய தினம் தேர்த் திருவிழா இடம்பெற்றது.

இத் தேர்த் திருவிழாவில் இலட்சக் கணக்கான பக்தர்கள் புடைசூழ, வானத்தில் இருந்து வானூர்தி பூ மழை பொழிய திருவீதியில் தேரேறிக் காட்சி தந்தான் நல்லூர்க் கந்தன்.

பறவக்காவடி, அங்கப்பிரதிஸ்டை, அடியழித்தல் என அடியார்கள் தமது நேர்த்திக் கடன்களைத் தேரடியில் நிறைவேற்ற, தேர் மீது அமர்ந்து ஆறுமுகக் கந்தன் அருள்பாலித்தான்.

அத்துடன் நல்லூர்க் கந்தனின் இவ் வருட மஹோற்சவத்தின் இறுதி நாளான நாளை தீர்த் தோற்சவம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





கருத்துகள் இல்லை: