நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 193 உறுப்பினர்களுக்கான சத்தியப் பிரமாண நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நல்லூர் இளம் கலைஞர் மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இதில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள், கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்கள் பங்கு கொள்ளவுள்ளனர்.
கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு,கிழக்கில் 25 உள்ளூராட்சி சபைகளில் 20 சபைகளை கைப்பற்றியிருந்தது.
யாழ்.மாவட்டத்தில் 16 சபைகளுக்கான தேர்தலில் 13 சபைகளை கைப்பற்றியதுடன், கிளிநொச்சியில் உள்ள மூன்று சபைகளையும் கூட்டமைப்பு கைப்பற்றியிருந்தது. யாழ்.தேர்தல் மாவட்டத்தில் மொத்தமாக கூட்டமைப்பு சார்பில் 16 பேர் வெற்றி பெற்றிருந்தனர்.
அதாவது யாழ்.மாவட்டத்தில் 140 பேரும் கிளிநொச்சியிலுள்ள மூன்று பிரதேச சபைகளில் 22 பேரும் வெற்றிபெற்றிருந்தனர்.
இதனுடன் முல்லைத்தீவு துணுக்காயில் 7 பேரும் திருமலை மாவட்டத்தில் 8 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 11 பேருமாக கூட்டமைப்பு சார்பில் 193 பேர் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக