திங்கள், 1 ஆகஸ்ட், 2011

ரமழான் தலைப்பிறை தென்பட்டது; நாளை நோன்பு ஆரம்பம்

புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பிரதேசத்தில் தென்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை சற்றுமுன்னர் அறிவித்ததுள்ளது. இதற்கிணங்க இலங்கை வாழ் முஸ்லிம்கள் செவ்வாய்க்கிழமை

அதிகாலை நோன்பு நோற்கலாம் எனவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தெரிவித்தது.

வழமைக்கு மாறாக பல தமிழ் சகோதரர்கள் ரமழான் மாதத்திற்காக தலைப்பிறையை பார்த்து கொழும்பு பெரியவாசாலுக்கு அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலின் மத்ரஸதுல் ஹமீதிய்ய மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது.

இந்த மாநாட்டில் அகில இலங்கை ஜம்இயமுல் உலமா சபை பிரதிநிதிகள், கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பிரதிநிதிகள், பள்ளிவாசல்கள், தைக்காக்கள் மற்றும் சாவியக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்

கருத்துகள் இல்லை: