திவுலப்பிட்டிய பிரதேசத்தில் வீட்டுத் தோட்டம் ஒன்றில் இருந்து 40 நாகப்பாம்புக் குட்டிகள் மீட்கப்ப்ட்டுள்ளன. மரகதமுல்ல பகுதியில் உள்ள வீட்டுத் தோட்டம் ஒன்றிலேயே இந்தப் பாம்புக் குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.
தோட்டத்தின் புற்று ஒன்றில் இருந்து வெளிவந்த இந்தப் பாம்புக் குட்டிகள் பிரதேச வாசிகள் பிடித்துள்ளனர். இவ்வாறு ஒரே தடவையில் அதிகளவில் பாம்புக் குட்டிகள் பிறந்நதாலும் சூழலின் தாங்கங்கங்களினால் அவற்றில் ஒரு சில மாத்திரமே உயிர் வாழ்வதாக சுற்றாடல் துறைசார் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பாம்புக் குட்டிகளை நேற்றிரவு பன்னல் வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கசென்ற போதிலும் அங்கு எவரும் இருக்கவில்லையென பிரதேச வாசியான ஜயசூரிய குறிப்பிட்டார்.
பின்னர் அவர்கள் பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதி ஒன்றில் பாம்புகளை விடுவித்துள்ளனர்





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக